நாவில் வைத்ததும் கரையும் வெண் பொங்கல் – சுவையாக செய்வது எப்படி?

Photo of author

By Divya

நாவில் வைத்ததும் கரையும் வெண் பொங்கல் – சுவையாக செய்வது எப்படி?

வெண் பொங்கல் நம் தென்னிந்தியர்களின் பாரம்பரிய உணவாகும்.இது ஒரு வகை கார உணவாகும்.இவை பச்சரிசி,பருப்பு,கருப்பு மிளகு,இஞ்சி,சீரகம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு தயாரிக்கும் ஒரு வகை கலவையான உணவாகும்.

தேவையான பொருட்கள்:-

*பச்சரிசி – 1 கப்

*பாசி பருப்பு – 1/2 கப்

*பால் – 1/4 கப்

*நெய் – 1/4 கப்

*பச்சை மிளகாய் – 2

*இஞ்சி – 1 துண்டு

*மிளகு – 1 தேக்கரண்டி

*சீரகம் – 1 தேக்கரண்டி

*முந்திரி – 12

*பெருங்காய தூள் – 1 தேக்கரண்டி

*கருவேப்பிலை – 2 கொத்து

*உப்பு  – தேவையான அளவு

*எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:-

முதலில் ஒரு பாத்திரத்தில் பச்சரிசி போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு கழுவி கொள்ளவும்.
அரை மணி நேரம் இந்த பச்சரிசியை ஊற வைக்கவும்.

அடுப்பில் கடாய் வைத்து பாசி பருப்பு சேர்த்து மிதமான சூட்டில் வாசனை வரும் வரை வறுக்கவும்.பிறகு அதை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு கழுவி கொள்ளவும். இதை 1/4 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.

பிறகு அடுப்பில் குக்கர் வைத்து 6 கப் அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைத்த பச்சரிசி மற்றும் பாசி பருப்பை சேர்க்கவும்.பின்னர் அதில் 1/4 கப் பால் சேர்த்து மூடி போட்டு மிதமான தீயில் 3 விசில் வரும் வரை வேக விடவும்.விசில் வந்ததும் குக்கரை இறக்கவும்.விசில் நின்ற பிறகு குக்கரை திறந்து வேக வைத்துள்ள பச்சரிசி + பாசி பருப்பு கலவையை கரண்டி வைத்து நன்கு கிண்டவும்.

பின்னர் அடுப்பில் கடாய் வைத்து 2 தேக்கரண்டி நெய் மற்றும் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும்.அவை சூடேறியதும் அதில் 1 தேக்கரண்டி கருப்பு மிளகு, ஒரு தேக்கரண்டி சீரகம், நறுக்கிய பச்சை மிளகாய்,இடித்து வைத்திருக்கும் இஞ்சி,முந்திரி மற்றும் பெருங்காய தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.பின்னர் 2 கொத்து கருவேப்பிலை சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.இதை குக்கரில் இருக்கும் பொங்கலில் சேர்த்து நன்கு கிண்டவும்.