டிசம்பர் 14ம் தேதியான இன்று ப்ளூம்பெர்க் பில்லியனர் இண்டெக்ஸ் வெளியிட்ட அறிவிப்பின்படி, உலகின் முதல் 5 பணக்காரரர்கள் பட்டியலில் எலன் மஸ்க்கிற்கு முதலிடம் இல்லை என்பது தெரியவந்துள்ளது. பிரெஞ்சு நாட்டை சேர்ந்த பிரபல கோடீஸ்வரரும் லூயிஸ் வுய்ட்டன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான பெர்னார்ட் அர்னால்ட் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை தட்டி சென்று எலன் மஸ்க்கை இரண்டாம் இடத்திற்கு தள்ளியுள்ளார். இப்போது முதல் 5 இடத்தை பிடித்த பணக்காரர்களின் பட்டியலை பற்றி இங்கே காண்போம்.
1) பெர்னார்ட் அர்னால்ட்:
உலகின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் இடம் வகித்து வந்த பெர்னார்ட் அர்னால்ட் தற்போது உலகின் முதல் பணக்காரராக திகழ்கிறார். இவரது சொத்தின் நிகர மதிப்பு $171 பில்லியன் ஆகும். ஊடங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின்படி அர்னால்ட் மற்றும் அவரது குடும்பத்தினரின் மொத்த சொத்து மதிப்பு $188.6 பில்லியன் ஆகும்.
2) எலன் மஸ்க்:
டெஸ்லாவின் பங்கில் ஏற்பட்ட சரிவால் எலன் மாஸ்க் உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறார். எலன் மஸ்க்கின் மொத்த சொத்தின் நிகர மதிப்பு $164 பில்லியன் ஆகும்.
3) கெளதம் அதானி:
இந்தியாவின் மிகவும் பிரபலமான தொழிலதிபர் மற்றும் கோடீஸ்வரரான கெளதம் அதானி $125 பில்லியன் சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாமிடம் பிடித்திருக்கிறார்.
4) ஜெஃப் பெஸோஸ்:
அமேசான் நிறுவனத்தின் நிறுவனரும், முன்னாள் தலைவரும் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜெஃப் பெஸோஸ் $116 பில்லியன் சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் நான்காமிடம் பிடித்திருக்கிறார்.
5) பில் கேட்ஸ்:
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில் கேட்ஸ் $116 பில்லியன் சொத்து மதிப்புகளுடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் ஐந்தாமிடம் பிடித்திருக்கிறார்.