கொரோனா வைரஸ் பாதிப்பால் உலக நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்! உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை

0
119
World Health Organisation-News4 Tamil Latest Online Tamil News Today
World Health Organisation-News4 Tamil Latest Online Tamil News Today

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலக நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்! உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை

உலக சுகாதார அமைப்பு சீனாவில் கொரோனா வைரஸின் தாக்குதல் மிகவும் கடுமையாக உள்ளதால் உலக நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது .

சீனாவில் இந்த வைரஸ் தாக்குதல் மிகவும் கடுமையாக உள்ளது. சீனாவில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை இந்த வைரஸ் தாக்கிய நோயாளிகளின் எண்ணிக்கை 4,516. இதில் 560 பேருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர் . 130 பேர் கவலைக்கிடமான நிலையில் இருக்கின்றனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

வைரஸ் வேகமா பரவுவதை தடுக்க சீன அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதேபோல் 2009 ஆம் ஆண்டு சீனாவில் பன்றி காய்ச்சல் பரவிய போதும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கைவிடுத்தது.

இந்த வைரஸ் தாக்குதலை சர்வதேச எமர்ஜென்சி என்று அறிவிக்கிறோம் . உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous articleசூப்பர் ஸ்டாரின் சாகசங்கள் கண்களுக்கு விருந்து: மேன் வெர்சஸ் வைல்ட் குறித்து டிஸ்கவரி
Next articleகாதலியை காட்டிற்கு அழைத்துச் சென்ற காதலன்! நண்பர்களுக்கு விருந்தாக்க நினைத்த கற்பழிப்பு பிளான்..!!