சபரிமலை செல்பவரா! இதோ இதையும் தெரிந்து கொண்டு செல்லுங்கள்!

Photo of author

By Rupa

சபரிமலை செல்பவரா! இதோ இதையும் தெரிந்து கொண்டு செல்லுங்கள்!

சமீபத்தில் மழை காரணமாக கேரளாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.அதனால் மக்கள் பெரும் இழப்புக்களை சந்தித்தனர்.மேலும் பக்தர்கள் சபரிமலை செல்வதற்கு தடை விதித்திருந்தனர்.அதுமட்டுமன்றி சென்ற வருடமும் தொற்று பாதிப்பு அதிகமாக காணப்பட்டது.கேரளாவில் உள்ள கர்ப்பிணி பெண்களை அதிகளு தாக்கியது.அந்த சூழலிலும் சபரிமலை செல்ல தடை விதித்தனர். தொற்று பாதிப்பு குறைந்த பின்னர்  பக்தர்கள் சபரிமலை செல்ல கேரள அரசு அனுமதி அளித்தது.அதைப்போல இந்த வருடம் முதலில் வெள்ளப்பெருக்கு காணப்பட்டது.தற்போது மழைஅலைவு குறைந்து பழைய நிலைக்கு திரும்பியுள்ளனர்.

அதனால் சபரிமலை இன்று திறக்கப்பட்டுள்ளது.அவ்வாறு சபரிமலைக்கு தரிசனம் செய்ய செல்லும் பக்தர்கள் முன்கூட்டியே டோக்கன்களை பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்வதற்கும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடித்து நடக்கவேண்டும்.அவற்றிலும் குறிப்பாக முக கவசம் அணிவது மற்றும் தனிமனித இடைவெளி கடைபிடிப்பது போன்றவற்றை  கட்டாயமாக்கி உள்ளனர்.மேலும் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கட்டாயம் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு இரண்டு டோஸ் தடுப்பூசி  செலுத்தவில்லை என்றால் கட்டாயம் கொரோனா டெஸ்ட் செய்த  சான்றிதழ் கையிருப்பில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

அதைப்போல கோயிலில் தினசரி ஹரிவராசனம் சடங்குகள் முடிந்த பின்னரே இரவு 9 மணி அளவில் நடை சாத்தப்படும் என்று கோவில் நிர்வாகம் கூறியுள்ளனர். அதேபோல மாலை  பூஜைக்கு பின்னர் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக மீண்டும் நவம்பர் 15ஆம் தேதி கோயில் திறக்கப்படும் என்று கேரள அமைச்சர் கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.