10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து எதிரொலி! ஸ்தம்பித்தது தமிழகம்!

0
105

வன்னியர் சமூகத்திற்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை தொடர்ந்து அதனை கண்டித்து நேற்றைய தினம் பல்வேறு பகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சியை சார்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பதற்கு சற்று நேரத்திற்கு முன்னர் வன்னியர் சமூகத்திற்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பு சட்டசபையில் வெளியானது. ஆனாலும் அந்த சமயத்திலேயே இது தற்காலிகமானதுதான் என்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் குறிப்பிட்டிருந்தார்கள். இதனைத் தொடர்ந்து திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில் கடந்த ஜூலை மாதம் இந்த 10.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 25 க்கும் மேலான மனுக்கள் மீது விசாரணை செய்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நேற்று இதற்கான இறுதித் தீர்ப்பை வழங்கியது.

அந்த தீர்ப்பின் உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்திருப்பதாவது கல்வி மற்றும் மாநில அரசின் வேலை நியமனங்கள் உள்ளிட்டவற்றின் வழங்கப்பட்டிருக்கின்றன இந்த 10.5 சதவீத சிறப்பு இட ஒதுக்கீடு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக இருக்கிறது என்று நீதிபதிகள் துரைசாமி மற்றும் முரளி சங்கர். உள்ளிட்டோர் தெரிவித்து இருக்கிறார்கள்.

இட ஒதுக்கீட்டிற்கு வெறும் ஜாதியை மட்டும் அளவுகோலாக வைத்துக் கொள்ள இயலாது என்றும், மக்கள்தொகை சமூக கல்வி நிலை மற்றும் மற்ற சேவைகள் உள்ளிட்டவற்றில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவம் குறித்த தரவுகளே இல்லாமல் இந்த சட்டம் அரசால் இயற்றப்பட்ட இருக்கிறது என நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

102 ஆவது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் 2018 க்கு பின்னரும் 105 ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்டம் 2020 ஒன்றுக்கு முன்பும் தடைசெய்யப்பட்ட சட்டத்தை உருவாக்க மாநில சட்டசபைக்கு தகுதி இருக்கிறதா? இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 338b பிரிவின்படி பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறித்த எந்த முடிவையும் எடுப்பதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா?

சாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா? பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள் தொகை சமூக நிலை உள்ளிட்ட தரவுகள் இன்றி இட ஒதுக்கீடு வழங்க இயலுமா?

தரவுகளும் இன்றி பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் இந்திய அரசியலமைப்பின் 14,15,16 உள்ளிட்ட சட்டப்பிரிவுகளை மீறுகிறதா? போன்ற கேள்விகளை இந்த வழக்கு விசாரணையின்போது நீதிமன்றம் எழுப்பி இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், மாநில அரசு போதுமான தகவல் தெரிவிக்கவில்லை என்று தெரிவித்து நேற்று இந்த உள் இட ஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

இந்தநிலையில் இந்த தனி இட ஒதுக்கீடு மசோதாவிற்கு  இந்த சட்டம் இயற்றப்பட்ட போதே தற்போதைய ஆளும் கட்சியாக இருக்க கூடிய திமுக எதிர்ப்பு தெரிவித்தது இந்தநிலையில், மாநில அரசின் சார்பாக தகுந்த விளக்கங்கள் அளிக்கப்படவில்லை என்று தெரிவித்து இந்த சட்டத்தை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்திருப்பது சந்தேகத்தை எழுப்புகிறது.

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அடுத்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இந்த தீர்ப்பு ஏமாற்றம் வழங்குவதாகவும், இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார் .

 

இந்த நிலையில் ,உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு கிடைக்கும் வரையில் போராடுவோம் என்று  தெரிவித்தார்கள்.கடலூரில் எட்டு பகுதிகளில் போராட்டத்தில் இறஙகினார்கள் பா.ம.க.வினர்.

அதாவது பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம், திட்டக்குடி, நடுவீரப்பட்டு, நெய்வேலி ,டவுன்ஷிப் வடலூர் ,உள்ளிட்ட பகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சியினர் போராட்டத்தில் குதித்தார்கள் சிதம்பரம் காந்தி சிலை அருகே கடலூர் தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயலாளர் சசி குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த சமயத்தில் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று வன்னியர் சங்க மாநில தலைவர் பூ.தா அருள்மொழி கண்டன உரை நிகழ்த்தினார்.

பாட்டாளி மக்கள் கட்சியினர் மற்றும் வன்னியர் சங்கத்தை சேர்ந்த நூற்றுக்கும் அதிகமானோர் செஞ்சி நான்குமுனை சந்திப்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் இறங்கினார்கள், அந்த சமயத்தில் திமுக அரசு தங்களை பழி வாங்கி விட்டதாக அவர்கள் முழக்கமிட்டார்கள். இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தார்கள் அதேபோல விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தார்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நடந்த இந்த போராட்டத்தில் பங்கேற்று திமுக அரசுக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சியினரும் பொதுமக்களும் முழக்கம் இட்டார்கள்.

அதேபோல சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையம் முன்பு பாட்டாளி மக்கள் கட்சியினர் சாலை மறியலில் இறங்கினார்கள் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் நடராஜன் தலைமையில் பெரியார் சிலை முன்பு நடந்த இந்த போராட்டத்தில் பங்க் ஏற்றுக்கொண்டவர்கள் திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள் அந்த சமயத்தில் அந்த வழியாக வந்த நகரப் பேருந்து ஒன்றின் மீது போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் கண் எரிந்ததால் பேருந்தில் முன்பக்க கண்ணாடி சேதமானது. இதனை தொடர்ந்து பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆத்தூர் நகர காவல் ஆய்வாளர் மூர்த்தி அந்த நபரை கைது செய்து இருக்கிறார்.

அதேபோல கிருஷ்ணகிரி சுங்க சாவடி அருகே கிருஷ்ணகிரி பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாட்டாளி மக்கள் கட்சியினர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் இறங்கினார்கள் இதன் காரணமாக கிருஷ்ணகிரி பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் கள்ளக்குறிச்சி நான்கு முனை சாலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சாலை மறியல் போராட்டம் நடந்தது அதேபோல தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் பேருந்து நிலையம் அருகே முன்னாள் சட்டசபை உறுப்பினர் வேலுச்சாமி நூற்றுக்கும் அதிகமான பாட்டாளி மக்கள் கட்சியை சார்ந்தவர்கள் போராட்டத்தில் இறங்கினார்கள் இதனால் பாதுகாப்பு நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தார்கள்.