வரலாற்றிலேயே சிறந்த பிரதமர் இவர்தான்?

0
164

ஜப்பானிய வரலாற்றிலேயே  ஷின்ஸோ அபே (Shinzo Abe) தான் மிகச் சிறந்த பிரதமர் என்று அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் பாராட்டியுள்ளார். தலைவர்கள் இருவரும் தொலைபேசியில் உரையாடியபோது,  டிரம்ப், அவ்வாறு கூறியதாக வெள்ளை மாளிகைப் பேச்சாளர் தெரிவித்தார். உடல்நலக் குறைவு காரணமாக அபே, பதவி விலகுகிறார். அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான உறவு, முன்னெப்போதும் இல்லாத அளவு வலுவாய் இருப்பதாகவும், அதற்குத் அபே அரும்பணியாற்றி உள்ளதாகவும் வெள்ளை மாளிகை குறிப்பிட்டது. தாம் பதவி விலகிய பிறகும், இரு நாடுகளுக்கு இடையிலான உறவு தொடர்ந்து வலுவாக இருக்கும் என்று அபே, அமெரிக்க அதிபரிடம் கூறியதாக, ஜப்பானிய அரசாங்கப் பேச்சாளர் தெரிவித்தார்.

Previous articleஇரண்டு முறை பயன்படுத்தக்கூடிய தடுப்பு மருந்து?
Next articleவறட்சியான முடி, சுருட்டையான முடியை நேராக்க வீட்டில் உள்ள பொருள் போதும்!