தளபதி விஜய்யுடன் இருப்பது யார்?? அட இவரு அவரா இருக்குமோ!!

0
29
Who is with Thalapathy Vijay?? Oh, this is him!!
Who is with Thalapathy Vijay?? Oh, this is him!!

தளபதி விஜய்யுடன் இருப்பது யார்?? அட இவரு அவரா இருக்குமோ!!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தான் தளபதி விஜய்.அவர் தொடக்க காலத்தில் அவரது தந்தையான எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் தனது நடிப்பை தொடங்கினார்.

அன்று அவர் பெரிதும் பேசப்படவில்லை என்றாலும் இன்று அவரை தெரியாத நபர்களே இல்லை.அவரின் ரசிகர்கள் “தளபதி” என்று அன்பாக அழைக்கின்றனர்.

இவருக்கு ரசிகர் கூட்டம் சீனா ,ஜப்பான் ,பிரான்சு போன்ற பல நாடுகளில் உள்ளது. இவர் பாடுவதிலும் மிகவும் திறமையுடன் இருந்தார். இதுவரை 32 பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது தளபதி விஜய் அவர்கள் வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “லியோ” என்னும் படத்தில் நடித்து கொண்டு வருகின்றார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது நிறைவு கட்டத்தை எட்டியுள்ள நிலையில் 2023 ம் ஆண்டு மிக சிறந்த வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இது ஒரு சிறந்த ஆக்சன் படமாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.இந்த படத்தில் தளபதி விஜய் அவர்களுடன் திர்ஷா அவர்கள் கதாநாயகியாக நடித்து வருகின்றார் என்பது குறிபிடத்தக்கது.

இப்படி படம் பற்றிய அப்டேட் ஒருபுறம் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்பொழுது விஜய் அவர்களின் சிறு வயது போட்டோ ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி கொண்டு வருகின்றது.

அந்த புகைப்படத்தில் தளபதி விஜய் அவர்களுடன் இன்னொரு நபர் உள்ளார்.அது வேற யாரும் இல்லை  விஜய்யின் நண்பர் சஞ்சீவ் என்பது குறிபிடத்தக்கது.இது அவரின் சிறுவயது புகைப்படம்.

author avatar
Parthipan K