முதல் போட்டியில் வெல்வது யார் சென்னையா, மும்பையா?

0
156

இந்தியாவில் கடந்த 2008 முதல் கோடை விடுமுறையில் ஐ.பி.எல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டிக்கு உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் பெரிய அளவில் உள்ளது. ஆனால் இந்த முறை ஐ.பி.எல் தொடரை இந்தியாவில் நடத்த முடியாது சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. இந்த தொடர் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை நடைபெற இருக்கிறது. இதற்காக எட்டு அணி வீரர்களும் துபாய்க்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் முதல் போட்டியில் சென்னையும், மும்பையும் மோத இருந்தன.

ஆனால் சென்னை அணியில் பயிற்சியாளர் உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரிய வந்ததால் சென்னைக்கும், மும்பைக்கும் போட்டி நடைபெறுமா என குழப்பம் நீடித்து வந்ததது. தற்போது அனைத்து வீரர்களுக்கும் கொரோனா சரியான நிலையில் முதல் போட்டி சென்னைக்கும், மும்பைக்கும் என தீர்மானிக்கப்பட்டது. இதனை அடுத்த போட்டி தொடங்க நான்கு நாட்களே உள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleஅக்டோபர் மாதத்திலிருந்து இதன் விலை உயரப்போகின்றது:! விலை உயர்வுக்கு காரணம் இதுதான்!
Next article21 ஆண்டுகளுக்கு முன் முதல்வன் படத்தில் நடிக்க மறுத்த தளபதி விஜய்!  ரகசியத்தை வெளியிட்ட இயக்குனர் சங்கர்!