நான் ஏன் காந்தியைக் கொன்றேன்? வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் விதித்த உத்தரவு!

Photo of author

By Parthipan K

நான் ஏன் காந்தியைக் கொன்றேன்? வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் விதித்த உத்தரவு!

Parthipan K

நான் ஏன் காந்தியைக் கொன்றேன்? வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் விதித்த உத்தரவு!

1948-ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி நாதுராம் கோட்சே என்பவர் மகாத்மா காந்தியை சுட்டுக் கொலை செய்தார். கோட்சேவின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு அவரது சகோதரர் கோபால் கோட்சே எழுதிய புத்தகம்தான் ‘நான் ஏன் காந்தியைக் கொன்றேன்?’ (Why I Killed Gandhi?).

தற்போது இந்தப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு அசோக் தியாகி இயக்கியுள்ள ‘ஒய் ஐ கில்டு காந்தி’ என்ற படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. இதற்கிடையில் இந்த திரைப்படத்திற்கு பல்வேறு தரப்பிலும் இருந்தும் கண்டனங்கள் எழுந்தது.

மேலும் அரசியல் கட்சித் தலைவர்கள் தொடங்கி பல்வேறு தரப்பினரும் இப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று குரல் எழுப்பி வருகின்றனர். அந்த வகையில், அகில இந்திய சினிமா தொழிலாளர்கள் அமைப்பு சார்பில் இந்த திரைப்படத்திற்கு தடை கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதப்பட்டது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ”இந்த திரைப்படம் வெளியாவதை தடுக்காவிட்டால், அது மீளமுடியாத பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், பொது அமைதியை சீர்குலைத்து, ஒற்றுமையின்மையையும், வெறுப்பையும் விதைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

இது காந்தியின் நற்பெயருக்கு களங்களத்தை ஏற்படுத்தி, அவரைக் கொன்ற ஆர்எஸ்எஸைச் சேர்ந்த கோட்சேவை புனிதப்படுத்தும் எனவே இந்த படத்தை தடைவிதிக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது. மேலும் இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றத்தை நாடவும் மனுதாரர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.