கற்கண்டாக நினைத்து கற்பூரத்தை தின்றுவிடும் குழந்தைகள்! கற்பூரத்தில் உள்ள ஆபத்து என்ன..?

Photo of author

By Jayachandiran

கற்கண்டாக நினைத்து கற்பூரத்தை தின்றுவிடும் குழந்தைகள்! கற்பூரத்தில் உள்ள ஆபத்து என்ன..?

Jayachandiran

Camphor

பூஜையறையில் உள்ள கற்பூரத்தை கற்கண்டாக நினைத்து குழந்தைகள் தின்றுவிடும் சூழல் இருப்பதால் கற்பூரத்தில் உள்ள ஆபத்து என்ன? என்பது குறித்து இங்கு பாப்போம்.

கல்கண்டு போலிருக்கும் கற்பூரம்:

நமது வீட்டில் பூஜை அறையிலோ அல்லது அலமாரி போன்ற இடங்களில் கற்பூரத்தை வைத்துவிடுவது வழக்கமான ஒன்றுதான். சாமி போட்டோவிற்கு முன்பு வைக்கப்படும் கற்பூரம் இனிப்பு வகையான கற்கண்டை போலவே இருப்பதால் சில நேரத்தில் கற்பூரத்தை கற்கண்டாக நினைத்து குழந்தைகள் தின்றுவிடுகிறார்கள்.

கற்பூரத்தில் உள்ள ஆபத்து: 

கற்பூரம் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா..? (why is camphor bad for babies) கற்பூரத்தை தின்ற சில நிமிடங்களில் கை, கால் இழுப்பு வர ஆரம்பிக்கும். பிறகு இரண்டு கண்களும் உள்ளே சொருக ஆரம்பித்துவிடும். இவை இரண்டுமே உயிருக்கு ஆபத்தான அறிகுறிகள். கற்பூரத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்பதை நாம் அனைவரும் அறியவில்லை. இனி தெரிந்து கொள்வோம்.

கற்பூரத்தை சாப்பிட்டவர்களுக்கு சிகிச்சை:

கற்பூரத்தில் இருக்கும் “கேம்பர்” என்று சொல்லக்கூடிய நச்சுப் பொருள் உடலில் கடுமையாக பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. கற்பூரம் விழுங்கி மயக்கம் அடைந்தவர்களுக்கு பாய்சன் கன்ட்ரோல் மூலம் அவசர சிகிச்சை அளிக்கப்படும்.

இந்த சிகிச்சையில் முதலாவதாக, சலைன் என்று சொல்லுக்கூடிய ஊசி போடப்படுகிறது. ஊசி போடும்போது உடலில் அசைவு இருக்க வேண்டும். அசைவு இல்லையேல் சுயநினைவை இழந்து டிப்ரசன் மோடுக்கு சென்றுவிட நேரலாம்.

கேம்பர் என்னும் நச்சுப் பொருளால் ஒருவர் கோமா நிலைக்கும் செல்ல வாய்ப்புண்டு. இதுபோன்ற பிரச்சினைகளில் உடனடியாக சிகிச்சை பெற்றால் கூட 10 லிருந்து 15 மணி நேரம் கழித்துதான் நார்மலாக குணமாக முடியும் என்பதே மருத்துவ உண்மை.

எனவே குழந்தைகளை கவனத்துடன் பார்த்துக் கொள்வது நல்லது. கற்பூரம் மட்டுமல்ல எந்த வேதிப் பொருட்களையும் குழந்தைகளுக்கு எட்டும் இடத்தில் வைக்க வேண்டாம்.