வாபஸ் பெற்ற பிறகும் நிலுவையில் ஏன்?? அதிரடியாக கேள்வி எழுப்பிய ஐகோர்ட்!!
நாம் தமிழர் சீமான் மீதான வழக்கு 11 ஆண்டுகள் நிலுவையில் இருந்தது ஏன் என ஐகோர்ட் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
தற்போது தமிழ்நாட்டில் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் வழக்கு விசாரணைகளில் ஒன்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மீது நடிகை விஜயலட்சுமி அவர்கள் கொடுத்த புகார் தான்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் நடிகர் சீமான். இவரது கட்சி அதிமுக மற்றும் திமுகவை அடுத்து தற்போது மிகவும் பிரபலமாகி மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் சீமான் அவர்கள் நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பெயரில் 2011 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வழக்கு தொடுத்தார். இந்த வழக்கின் மீதான விசாரணையானது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தலைமையில் விசாரணைக்கு நேற்று வந்தது.
விசாரணையின் போது வழக்கின் சாரம்சங்களை கேட்டு அறிந்த நீதிபதி அவர்கள் விஜயலட்சுமி வழக்கை வாபஸ் பெற்ற பிறகும் 11 ஆண்டுகளாக சீமான் மீதான இந்த வழக்கு நிலுவையில் இருந்தது ஏன்?? எனக் கேள்வி எழுப்பினார். இந்த செயல் தொடர்பாக போலீசார் உரிய விளக்கம் அளிப்பதோடு விஜயலட்சுமி கொடுத்த புகார்கள், மற்றும் அவர் வாபஸ் பெற்ற விபரங்கள் உள்ளிட்டவற்றை உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் இந்த வழக்கு தொடர்பான உரிய ஆவணங்களை சீமான் தரப்பானது போலீசாருக்கு வழங்க வேண்டும் எனவும் கூறிய நீதிபதி இந்த வழக்கின் விசாரணையை வருகின்ற 26 ஆம் தேதி ஒத்தி வைத்தார்.