அந்த 1 கேள்விக்கு ஏன் பதில் வரவில்லை!! அமைச்சரின் கடிதத்திற்கு ஆளுநரின் விளக்கம்!!
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு குறித்து நடவடிக்கை எடுப்பதற்காக ஆளுநர் ஆர்.என். ரவி –யிடம் அனுமதி கேட்டு, சட்டத்துறை அமைச்சர் கடிதம் ஒன்று எழுதினார்.
முன்னாள் அதிமுக அமைச்சர்கள் ரமணா மற்றும் விஜயகுமார் மீதான குட்கா விவகாரத்தை பற்றி மத்திய புலனாய்வுத் துறை அதாவது CBI விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த விவகாரத்திற்கு நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதினார். இது குறித்து பேசிய ஆளுநர், சட்டம் சார்ந்த விளக்கத்திற்காக தான் காத்திருப்பதாக கூறி உள்ளார்.
மேலும், அதிமுக கட்சியின் முன்னாள் வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி மீதான வழக்கு குறித்து எந்த ஒரு ஆவணமும் சரியாக இல்லாததால் அதற்கு ஒப்புதல் வழங்கவில்லை என்று கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து அதிமுக கட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பணியாற்றிய கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்பான வழக்கிற்கு, மாநில அரசிடமிருந்து எந்த ஒரு ஆதாரமும் வரவில்லை என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறி உள்ளார்.
இவ்வாறு அமைச்சர் ரகுபதி ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில் மொத்தம் நான்கு கேள்விகளை கேட்டிருந்தார். அதில் அமைச்சர்கள் மீதான வழக்கிற்கு நடவடிக்கை எடுப்பது குறித்து கூறிய ஆளுநர், நான்காவது கேள்வியான சட்ட மசோதாக்கள் நிலுவை தொடர்பான கேள்விக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை. இவரின் இந்த செயலால் அனைவரும் குழம்பி இருக்கின்றனர்.