அதிமுக ஆட்சி காலத்தில் சாத்தான்குளம் என்னும் ஊரில் தந்தை மற்றும் மகனை காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்று போலீசார் நடத்திய தாக்குதலில் தந்தை மகன் இருவரும் காவல் நிலையத்திலேயே உயிரிழந்தனர். அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் காவல்துறை மற்றும் அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்து போராட்டம் நடத்தினார். அதிமுக கட்சி பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் படத்தை பார்த்துவிட்டு என்னுடைய உள்ளம் நொறுங்கிவிட்டது, இந்த படம் எனக்குள் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது, என்னால் 3 நாட்கள் தூங்கவே முடியவில்லை, அந்த அளவிற்கு ஜெய் பீம் படம் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்று பேட்டி கொடுத்தார். இந்நிலையில் சிவகங்கையில் கோவிலில் செக்யூரிட்டியாக வேலை செய்யும் அஜித்குமார் என்பவர் அண்மையில் 10 பவுன் காணாமல் போன வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டார்.
காவல்துறையினர் விசாரணை நடத்திய நேரத்தில் அவரின் உடல்நிலை மோசமாகவே மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மதுரையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று அறிக்கை சமர்ப்பித்தனர். அவருடைய உடலில் மொத்தம் 18 இடங்களில் காயங்கள் இருந்துள்ளது.
காவல் நிலையத்தில் அஜித்குமார் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டபோது அங்கிருந்து அவரை விசாரணை செய்த ஆறு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த காவல் நிலைய கொலை பற்றி முதல்வரிடம் கேட்டபோது காவலர்களை பார்த்த பயத்தில் அவருக்கு இந்த மாதிரி நடந்திருக்கலாம். எல்லோருக்கும் போலீசை பார்த்தால் பயம் இருக்கத்தான் செய்யும், அந்த மாதிரியான பயத்தில் அஜித்குமார் இறந்திருக்கலாம் என்று யாருமே நம்ப முடியாத ஒரு காரணத்தை சொல்லி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி, தவெக விஜய், பாஜக நயினார் நாகேந்திரன், சீமான் போன்றோர் தொடர்ந்து இந்த விஷயத்தில் ஆளும் கட்சியான திமுகவையும், காவல் துறையினரையும் இந்த சம்பவத்திற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும், சம்மந்தப்பட்ட காவல் துறையை சேர்ந்த அதிகாரிகளுக்கு உடனடியாக விசாரித்து அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் குரல் எழுப்பி வருகின்றனர்.
இத்தனைக்கும் காவல்துறை முதல்வரின் நேரடிக்கட்டுப்பாட்டில் உள்ளது. ஜெய் பீம் மற்றும் சாத்தான்குளம் விஷயத்தில் பொங்கி எழுந்த ஸ்டாலின் சிவகங்கை அஜித்குமார் விஷயத்தில் எப்போது அதிரடி முடிவெடுப்பார் என பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் குமுறலை கொட்டி வருகின்றனர்.