கற்றாழையை ஏன் நம் வீட்டில் வளர்க்க வேண்டும்! முழு விவரங்கள் இதோ!
கற்றாழை என்பது பொதுவாகவே எண்ணற்ற வகைகள் உள்ளது. அதனை வீட்டில் வளர்ப்பது நன்மை தான். சோற்றுக்கற்றாழையை அனைவருடைய வீட்டிலுமே வளர்த்து வருகின்றனர்.
முன்னோர்களின் காலத்தில் கற்றாழையை கண் திருஷ்டி போக்குவதற்காக வளர்க்க வேண்டும் என கூறியிருப்பார்கள். இதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. சில சமயங்களில் வயிற்று வலி வந்தால் சோற்றுக்கற்றாழையை தோல் நீக்கி விட்டு சாப்பிட்டால் வயிற்று வலி உடனே சரியாகும்.
காலையில் எழுந்ததிலிருந்தே சுறுசுறுப்பாக இல்லாமல் இருந்தால் சோற்றுக்கற்றாழையை மோரில் சேர்த்து குடித்தால் உடலில் உள்ள கழிவுகள் நீங்கிவிடும். நம் வீட்டில் கண் திருஷ்டி இருக்கின்றது அதனை சரி செய்ய வேண்டும் என்றால் வெள்ளிக்கிழமை நாளில் கற்றாழையை வீட்டில் கட்ட வேண்டும்.
வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் நீங்க கற்றாழையை மோருடன் சேர்த்து குடிக்க வேண்டும். சோற்றுக்கற்றாழை செடியை வீட்டில் வளர்ப்பது சிறந்து.மேலும் இதனை தலை முடி வளர்வதற்கும் பயன்படுத்தலாம்.