விநாயகர் சதுர்த்திக்கு எதனால் தடை விதிக்கப்பட்டது? உண்மையை போட்டு உடைத்த முதலமைச்சர் ஸ்டாலின்!

Photo of author

By Sakthi

சட்டசபையில் விநாயகர் சிலை வைப்பதற்கு அனுமதி வேண்டும் என்று கேட்ட பாஜக உறுப்பினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு விளக்கத்தைத் தந்திருக்கிறார். கேரள மாநிலத்தில் ஓணம் மற்றும் பக்ரீத் பண்டிகைக்கு அனுமதி கொடுத்ததால் நோய் தொற்று அதிகரித்தது. நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு அறிவுரை வழங்கி இருக்கிறது. இதை எல்லாம் மனதில் கொண்டுதான் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது விநாயகர் சதுர்த்தியை பொது இடத்தில் கொண்டாடுவதற்கு தான் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தவிர தனியாக வீடுகளில் கொண்டாடுவதற்கு எந்தவிதமான தடையும் இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார் .

விநாயகர் சிலை செய்யும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார். முன்னரே மழைக்காலங்களில் அவர்களுக்கு 5,000 ரூபாய் வீடியோ நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது, இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு விதிக்கப்படுகின்றன தடையின் காரணமாக அவருடைய வாழ்வாதாரம் பாதிக்கப் படாத வண்ணம் பத்தாயிரம் ரூபாய் நிவாரணத் தொகை 3000 குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.