மீனவர்களே ஜாக்கிரதை! வானிலை ஆய்வு மையம் விடுத்த மிகக் கடுமையான எச்சரிக்கை!

0
71

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக இன்று முதல் வரும் 13-ஆம் தேதி வரையும் தமிழகம் மற்றும் புதுச்சேரி,காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சென்னையை பொருத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருக்கிறது. அதோடு அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் நகரத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 34டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதோடு அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். நகரத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

இன்று முதல் மன்னார் வளைகுடா உள்ளிட்ட கடற் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் அதாவது ஒரு மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதற்கான வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்துகிறது வானிலை ஆய்வு மையம். வங்க கடல் பகுதி மத்திய வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய தெற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்பு இருக்கிறது. ஆகவே மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வரும் 10 மற்றும் 11-ம் தேதிகளில் தென் கிழக்கு மத்திய வங்க கடல் பகுதிகள் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று பேசுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லியிருக்கிறது வானிலை ஆய்வு மையம். அதாவது ஒரு மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வகையில் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் அதற்கான வாய்ப்பு இருக்கிறது. இன்று முதல் வரும் 16ஆம் தேதி வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடலில் பலத்த காற்று வீசுவதால் காண வாய்ப்பு இருக்கிறது. இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்க படுகிறார்கள் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கின்றது.