கணவர் வருமானம் ஈட்டி வாங்கிய சொத்துக்களில் மனைவிக்கு உரிமை இல்லை?? உயர்நீதிமன்றம் அதிரடி!! 

Photo of author

By Amutha

கணவர் வருமானம் ஈட்டி வாங்கிய சொத்துக்களில் மனைவிக்கு உரிமை இல்லை?? உயர்நீதிமன்றம் அதிரடி!! 

மனைவியின் பணியோடு ஒருபோதும் கணவரின் பணிகளை ஒப்பிட முடியாது என்று உயர் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் இல்லத்தரசியின் வேலை என்பது 24 மணி நேர பணி. அதனால் அதை கணவரின் 8 மணி நேர வேலையோடு ஒப்பிட முடியாது என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இது பற்றிய வழக்கில் கூறப்பட்டிருப்பதாவது,

வருவாய் ஈட்டி கணவர்  வாங்கும் சொத்தில் மனைவி உரிமை கோருவது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறுகையில் வேலைக்குச் சென்று வருவாய் ஈட்டி குடும்பத்திற்காக தன் பங்களிப்பை கணவர் வழங்கினால், குடும்பத்தை முழு நேரமும் கவனித்து தனது முழு உழைப்பையும் குடும்பத்திற்கே தந்து மனைவி தன் பங்களிப்பை வழங்குகிறார். எனவே கணவர் வாங்கும் சொத்தில் மனைவிக்கும் சரி பாதியாக சம உரிமை உள்ளது.

குழந்தைகளை பெற்று வளர்த்து கவனிப்பது, குடும்ப நிர்வாகம் என இல்லத்தரசிகள் 24 மணி நேரமும் தங்களது பணியை செய்கின்றனர். எனவே கணவரின் 8 மணி நேர பணியை ஒருபோதும் மனைவியுடன் ஒப்பிட முடியாது. மேலும் குடும்பத்தை சரிவர மனைவி கவனிப்பது தான் கணவர் தனது பணியை சிறப்பாக செய்ய முடிகிறது என நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வாங்கிய சொத்துக்களை மனைவி உரிமை கோர முடியாது எனத் தொடர்ந்த வழக்கையும் அவர் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.