மாமன்னன்” திரைப்படம் வெளியாவதில் தாமதம்? இடைக்கால தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!!

0
151
#image_title

“மாமன்னன்” திரைப்படம் வெளியாவதில் தாமதம்? இடைக்கால தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!!

உதயநிதி ஸ்டாலின் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் “மாமன்னன்” திரைப்படம் தற்போது உருவாகியுள்ளது. இந்த படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.

இத்திரைப்படம் இந்த மாதம் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவரவிருக்கிறது. ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள், டீசர் மற்றும் டிரைலர் வெளியாகிவிட்ட நிலையில் இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதனுடன் படத்தை வெளியிடுவது தொடர்பான பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பாக மாமன்னன் திரைப்படம் வெளிவரக்கூடாது என்று இடைகாலத் தடை விதிக்க வேண்டி ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் சென்னையில் உள்ள உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அவர் அந்த மனுவில், தான் ஒரு திரைப்படத்தை தயாரித்து வருவதாகவும், அதில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாகவும், மேலும் நடிகைகள் ஆனந்தி, பாயல் மற்றும் யோகிபாபு முதலியோர் நடித்து உள்ள இந்த படத்திற்கு ஏஞ்சல் என்று பெயர் வைத்து இயக்குனர் கே.எஸ். அதியமானின் இயக்கத்தில் தயாரித்து வருகிறேன் என்று கூறி உள்ளார்.

மேலும், இந்த படத்திற்கு கடந்த 2018 ஆம் ஆண்டே படப்பிடிப்பு தொடங்கி 80% முடிவடைந்த நிலையில் உள்ளது. ஆனால் தற்போது ஏஞ்சல் படத்தை நிறைவு செய்யாமல் அதற்குள் மாமன்னன் படத்தில் நடித்திருக்கிறார்.

மாமன்னன் படத்தை தன்னுடைய இறுதி படம் என்றும் அவர் கூறி உள்ளார். எனவே உதயநிதி ஸ்டாலின் ஏஞ்சல் படத்தை நிறைவு செய்யாமல் மாமன்னன் படத்தை வெளியிட அனுமதி வழங்கினால் இது தங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறி உள்ளார்.

ஒப்பந்தத்தின்படி இன்னும் 8 நாட்களுக்கு கால்ஷீட் தராமல் உதயநிதி புறக்கணித்து வருகிறார். எனவே மீதமுள்ள படபிடிப்பை அவர் முடித்து தர வேண்டும்.

மேலும் ரூ.25 கோடியை இழப்பீடாக தர வேண்டும் எனவும், அதுவரை மாமன்னன் திரைப்படம் வெளிவரக்கூடாது என்றும் அவர் அந்த வழக்கில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில் இது தொடர்பான வழக்கு இன்று நீதிபதி குமரேஷ்பாபு தலைமையில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவுக்கு பதில் அளிக்க உதயநிதி ஸ்டாலின் மற்றும் படக்குழுவின் தயாரிப்பு நிறுவனம் சார்பாக அவகாசம் கேட்கப்பட்டது.

ஆதலால், இந்த வழக்கை நீதிபதி 28 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார். இருதரப்பினரும் 28 ஆம் தேதிக்குள் பதில் மனு அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

author avatar
CineDesk