மனைவியின் கள்ளகாதல்  விபரீதம்!! கணவனை கொன்ற  கள்ளக்காதலன் செய்த கொடூர செயல்!! 

Photo of author

By Amutha

மனைவியின் கள்ளகாதல்  விபரீதம்!! கணவனை கொன்ற  கள்ளக்காதலன் செய்த கொடூர செயல்!! 

கள்ளகாதலியின் கணவனை கொன்று புதைத்த கொடூரன் அடுத்து செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள  பாலி மாவட்டம் தகூர்வாஸ் கிராமத்தை சேர்ந்தவர் ஜோகிந்தரா வயது 33. இவரது மனைவிக்கும் அதே கிராமத்தில்  வசிக்கும்  மதன்லால் என்பவருக்கும் தகாத உறவு இருந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 11-ஆம் தேதி வீட்டினை   ஜோகிந்த்ரா  வெளியில் சென்றுள்ளார். ஆனால் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதன் காரணமாக சந்தேகம் கொண்ட அவரின் தந்தை இரண்டு நாட்கள் கழித்து 13-ஆம் தேதி போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு சந்தேக அடிப்படையில் மதன்லாலை கைது செய்து விசாரித்ததில் ஜோகிந்த்ராவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

சம்பவம் நடந்த அன்று ஜோகிந்த்ரா மற்றும் மதன்லால் இருவரும் கிராமத்திற்கு அருகே உள்ள வன பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு இருவரும் மது அருந்திய நிலையில் தனது கள்ளகாதலுக்கு இடையூறாக இருப்பதாக கூறி ஜோகிந்த்ராவுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு அவரை கூர்மையான ஆயுதத்தால் மதன்லால் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மீண்டும் கிராமத்திற்கு திரும்பிய மதன்லால் நள்ளிரவு வரை காத்திருந்து பின்னர் வன பகுதிக்கு திரும்பி உள்ளார். அங்கு கிடந்த ஜோகிந்த்ராவின் உடலை 6 துண்டுகளாக வெட்டினார். பின்னர் அவற்றை கிராமத்தில் உள்ள மத வழிபாட்டு தலத்தில் புதைத்து உள்ளார்.

அந்த இடங்களில் மாங்கன்றுகளை நட்டு, பின் யாருக்கும் சந்தேகம் வர கூடாது என தினமும் தண்ணீர் ஊற்றி வந்துள்ளார். இதைகேட்டு அதிர்ந்த போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்று ஜோகிந்த்ராவின் உடல்பாகங்களை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மதன்லாலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.