லிபோர்னியாவில் ஆண்டு தோறும் கோடை காலத்தில் மரங்கள் வெயிலின் காரணமாக காய்ந்து சருகாகி விடும். அந்த சமயங்களில் மின்னல் போன்ற இயற்கை காரணிகளாலும், மனிதர்களின் தவறுகளாலும் காட்டுத் தீ ஏற்படுகிறது. அத்துடன் வேகமாக வீசும் காற்றும் தீ பரவுவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் கலிபோர்னியா மாகாணத்தில் ஒரே சமயத்தில் பல இடங்களில் காட்டுத்தீ பரவி பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. அந்த வகையில் கடந்த சில வாரங்களாக கலிபோர்னியா மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது.
கடந்த மாதம் 15-ந்தேதி முதல் தற்போது வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட காட்டுத்தீயை கலிபோர்னியா கண்டுள்ளது. அந்த வகையில் தற்போது கலிபோர்னியா மாகாணம் முழுவதும் 24 இடங்களில் பயங்கர காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இந்த காட்டுத் தீயை அணைப்பதற்காக கடுமையாக போராடி வருகின்றனர். வறண்ட வானிலை மற்றும் காற்றின் வேகம் காரணமாக காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதில் சிக்கல் நீடிக்கிறது. கடந்த 5 நாட்களில் இந்த காட்டுத்தீ 78 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை சாம்பலாக்கியது.