இந்த போட்டியில் கண்டிப்பாக வெல்லும்

Photo of author

By Parthipan K

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. அந்த வகையில் கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டிகளும் நடக்கவில்லை தற்போதுதான் இங்கிலாந்தில் ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடத்தப்படுகின்றன. தற்போது இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையே மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடர் நடக்க உள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து எதிர்பாரத வெற்றியை பெற்றது. பாகிஸ்தான் தோல்வியை குறித்து முன்னால் கேப்டனான இன்சமாம் உல் ஹக் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது ஆச்சரியமாக உள்ளது. பாகிஸ்தான் வலுவான நிலையில் இருந்த போதும் இங்கிலாந்தின் அபாரமான பேட்டிங்கால் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது இன்று நடக்க இருக்கும் 2வது போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெரும் என நம்பிக்கை உள்ளது என கூறினார்.