பெங்களுரு அணியின் கேப்டனாக கோலி தொடருவாரா?

Photo of author

By Parthipan K

ஐபிஎல் கிரிக்கெட்டில் எட்டு அணிகள் பங்கேற்கும். அந்த வகையில் கடந்த ஏழு சீசனில விராட் கோலி பெங்களுரு அணியின் கேப்டனாக இருந்துள்ளார்.  அவர் இந்திய அணியில் சிறப்பாக செயல் பட்ட போதும் ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை என அவர் மீது பல விமர்சனங்கள் எழுந்தன. இதனால் ஆர்சிபி அணியின் கேப்டனாக விராட் கோலி நீடிப்பாரா? என்ற கேள்வி கூட எழுந்தது.
இந்த நிலையில் ஆர்சிபி அணியின் சேர்மன் சஞ்சீவ் சுரிவாலா பேசும்போது விளைாட்டை  பொறுத்தவரை ஒருசில  நேரங்களில் தோல்வி அடைவது ,சாதாரணம் ஆனால் தனிப்பட்ட முறையில் விராட் கோலியின் சாதனையை மறந்துவிட முடியாது. ஒரு சிறப்பான லெவன் அணியை உருவாக்க முடியும் என்ற எண்ணத்தில் 21 வீரர்களை பெற்றுள்ளோம். ஒவ்வொரு வீரர்களும் ஆடும் லெவன் அணியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அர்த்தமுள்ள பங்கை அளிப்பார்கள் என்று கூறினார்.