ஜொகூர் மாநிலம் மலேசிய-சிங்கப்பூர் இடையேயான பாலத்தை குளிரூட்டப்பட்ட நடைபாதையை நிறுவ திட்டமிட்டு வருகிறது. இந்த பக்கமுள்ள பாலத்தின் சுமார் 350 மீட்டர் நீளத்திற்குக் குளிரூட்டப்பட்ட நடைபாதையை அமைப்பது திட்டம். சிங்கப்பூர் எல்லையில் அது முடிவடையும். இதற்காக 10 மில்லியன் வெள்ளியை பெற மத்திய அரசாங்கத்திடமிருந்து ஜொகூர் மாநில அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. நூற்றுக்கணக்கானோர் அன்றாடம் பாலத்தை நடந்தே கடப்பர். இப்போது பாலத்தில் நடக்க அனுமதி இல்லை. குளிரூட்டப்பட்ட நடைபாதையை சிங்கப்பூர் வரை நீட்டிக்க, அதன் அதிகாரிகள் விருப்பம் தெரிவித்ததாய் மலேசிய அதிகாரிகள் கூறினர்.