ஓபிஎஸ் வுடன் ஒருபோதும் ஒன்று சேர மாட்டேன்..என் முடிவு இதுதான்! இபிஎஸ் க்கு மறைமுகமாக வார்னிங் கொடுத்த அண்ணாமலை!
ஓபிஎஸ் இபிஎஸ் என்று உட்கட்சி மோதல் அதிமுக உள்ளே பெரும் கலவரமாக வெடித்து வருகிறது. இந்த தருணத்தை பாஜக லாபகரமாக உபயோகித்து வருகிறது.எவ்வாறென்றால்,அதிமுக உக்காட்சி மோதல் நடந்து கொண்டிருக்கும் வேளையில் பாஜக மௌனம் காத்து, திமுக வை எதிர்கொள்ளும் வகையில் தன்னை எதிர்க்கட்சியாக மாற்றியமைத்து வருகிறது.
அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளது. இன்னும் ஓராண்டு காலமே இருக்கும் நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இணைந்து முன்பை போல் கட்சியை நடத்தவும் மேலும் பாஜக உறுதுணையுடன் வரும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவும் மத்திய அரசு எதிர்பார்ப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆனால் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஓ பன்னீர் செல்வத்துடன் இனைய சிறிது கூட விருப்பமில்லை என கூறுகின்றனர்.ஓபிஎஸ் சசிகலா டிடிவி போன்றவருடன் கூட்டணி வைத்துக் கொள்ள எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொள்ள வில்லை என்பதால் பாஜக வருத்தத்தில் உள்ளதாக கூறுகின்றனர்.
இறுதிவரை எடப்பாடி தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை என்றால் மாற்று வழியை தான் உபயோகிக்க வேண்டி இருக்கும் என்று பாஜக பேசி வருகிறார்கள்.இது குறித்த அண்ணாமலை நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார். அதில், வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவை எதிர்க்க பாஜக தயாராக உள்ளது. குறிப்பாக முக்கிய தலைவர்கள் ஒன்று சேர வேண்டும் என பல அழைப்புகள் மேலிடத்திற்கு வருகிறது.
அதற்கான சரியான நேரம் வரும்.மேலும் இந்த தேர்தலில் அதிமுகவுடம் கூட்டணி வைப்பது பற்றி பாராளுமன்றத்தில் ஆலோனை செய்யப்படும் என கூறினார். இவர் கூறுவதை வைத்து பார்க்கையில், எடப்பாடிக்கு எதிராக உள்ள தலைவர்களை இவர்கள் பக்கம் இழுத்து மேலும் கட்சியின் சின்னம் முதற்கொண்டு முடக்கப்படும் என்று எடப்பாடியை எச்சரிப்பது போல் உள்ளது.