இந்தியாவின் அரையிறுதிக் கனவில் விளையாடும் மழை… செம்ம ஷாக்கான தகவல்!
இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி தற்போது மழை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 12 லீக் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதி முதலில் பேட் செய்த இந்திய அணி 6 விக்கெட்கள் இழந்து 184 ரன்கள் சேர்த்தது. இந்திய அணிய்ல் தொடர்ந்து சொதப்பி வந்த கே எல் ராகுல் இந்த போட்டியில் அரைசதம் அடித்து கலக்கினார்.
வழக்கம் போல சூர்யகுமார் யாதவ் அதிரடியில் புகுந்து விளையாடி 16 பந்துகளில் 30 ரன்களை சேர்த்தார். கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 62 ரன்கள் சேர்த்தார். கடைசி நேரத்தில் அஸ்வின் அதிரடியில் புகுந்து 6 பந்துகளில் 13 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து கடினமான இலக்கோடு களமிறங்கிய பங்களாதேஷ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் சரமாரியாக வான வேடிக்கைக் காட்டினார். 21 பந்துகளில் அரைசதம் அடித்தார். பங்களாதேஷ் அணி 6 ஓவர்களில் 66 ரன்கள் சேர்த்திருந்த போது மழை குறுக்கிட்டது.
அதனால் போட்டி இப்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஒருவேளை மழை விடாமல் போட்டி கைவிடப்பட்டால் இந்திய அணி டக்வொர்த் லூயிஸ் விதிப்படி இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்படும். 5 ஓவர்களை தாண்டினாலே டக்வொர்த் லூயிஸ் விதி செல்லுபடியாகும். இதனால் இந்தியாவின் அரையிறுதிக் கனவில் மழை மண்ணை அள்ளிப் போட்டுவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.