ரேஷன் கடைகளில் இனி இந்த பொருளும் வழங்கப்படும்? தமிழக அரசு வெளியிட்ட அப்டேட்!
தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் ரேஷன் அட்டை வழங்கப்பட்டுள்ளது.அந்த வகையில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றது.
மேலும் கடந்த வாரம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ 1000 ரொக்க பணம், பச்சரிசி , சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கப்பட்டது.அதுமட்டுமின்றி கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் அனைவரும் மாதம் 20 கிலோ அரிசி வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில் தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.அதனால் அவர்களின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் முதல்கட்டமாக ஐந்து மாவட்டங்களின் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய பரிந்துரைக்கப்பட்டு வருகின்றது.
மேலும் மருத்துவர்களே தேங்காய் எண்ணையை சமையலுக்கு பரிந்துரை செய்கின்றனர்.குறிப்பாக கேராளாவில் அனைத்து தேவைகளுக்கும் தேங்காய் எண்ணெய் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.அதனால் அனைத்து ரேஷன் கடைகளிலும் தேங்காய் எண்ணெய் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,