மக்களுக்கு முதலமைச்சர் மீதுள்ள நம்பிக்கை எங்களுக்கு நிச்சயமாகவெற்றியை தேடி தரும்! ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் பேட்டி! 

0
84

மக்களுக்கு முதலமைச்சர் மீதுள்ள நம்பிக்கை எங்களுக்கு நிச்சயமாகவெற்றியை தேடி தரும்! ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் பேட்டி!  

ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்எல்ஏவாக இருந்து வந்த காங்கிரஸ் கட்சியை சார்ந்த திருமகன் ஈவேரா மறைவை ஒட்டி அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதன்படி வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் நிலையில் அதற்கான வேட்பு மனு தாக்கல் வருகின்ற ஜனவரி 31ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது.

இதற்காக கட்சியினர் தங்களது வேட்பாளர்களை அறிவித்துக் கொண்டு வருகின்றனர். திமுக சார்பில் திமுகவின் கூட்டணி கட்சியும் மறைந்த எம்எல்ஏவின் தந்தையுமான இவிகேஎஸ் இளங்கோவன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பின்னர் அவர் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.  அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் அவர்களிடம்,

அனைத்து கூட்டணிக்கட்சி தலைவர்களையும் நேரில் சந்தித்து ஆதரவு கேட்க உள்ளேன்.  மேலும் மக்கள் நீதி மைய கட்சித் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கேட்க நேரம் கேட்டுள்ளோம்.

தொகுதியை எங்களுக்கு ஒதுக்கி தந்த திமுகவிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மக்கள் முதலமைச்சர் மீது வைத்துள்ள நம்பிக்கை எங்களுக்கு கட்டாயம் வெற்றியை தேடித் தரும். தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருமாறு முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்துள்ளேன். ஏற்கனவே திமுகவினர் தேர்தல் பரப்புரையை தொடங்கி விட்டனர். யார் வேட்பாளராக வரவேண்டும் என திமுக கூறியதாக எனக்கு தெரியவில்லை.

வேட்பாளர் தேர்வில் திமுக காங்கிரஸ் கட்சியிடம் கலந்து பேசி காங்கிரஸ் கட்சியின் மேலிடம் விரும்பியதால் என்னை வேட்பாளராக தேர்வு செய்து இருப்பார்கள் என நினைக்கிறேன். மேலும் அவர் எதிரணியில் இருப்பவர்கள் மிகப்பெரும் குழப்பத்தில் இருக்கிறார்கள் என நினைக்கிறேன். இந்த இடைத்தேர்தலில் நிற்கலாமா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் அவர்கள் இருப்பதாக இவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.