இத்தனை ஆயிரம் விமான ஊழியர்கள் பணி நீக்கமா?

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் விமான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் 17 ஆயிரத்து 200 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது கொரோனா காரணமாக சர்வதேச விமான போக்குவரத்து பெருமளவில் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலைமையை சமாளிக்க சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது ஊழியர்களில் 4 ஆயிரத்து 300 பேரை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த பணி நீக்கம் மிக விரைவில் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இந்த திடீர் முடிவால் அந்நிறுவன ஊழியர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Leave a Comment