ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முக்கிய வீரர் அணிக்கு திரும்புவாரா

Photo of author

By Parthipan K

பென் ஸ்டோக்ஸ் 14 நாட்கள் காத்திருந்து குடும்பத்துடன் இணைந்துள்ளார். வருகிற 19-ந்தேதி ஐபிஎல் போட்டி தொடங்குகிறது. முதல் போட்டியில் விளையாட வேண்டுமென்றால் ஒரு வாரத்திற்கு முன்னதாக வந்து ஆறு நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏற்கனவே அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தியதால் குடும்பத்துடன் அவர் தங்கியிருக்கும் காலம் மிகக் குறைவாக இருக்கும். இதனால் கூடுதல் நாட்கள் நியூசிலாந்தில் தங்கிருப்பார் என்று கூறப்படுகிறது. ஆகவே, ஐபிஎல் தொடக்கத்தில் அவர் கலந்து கொள்ள மாட்டார் எனத் தெரிகிறது.
தற்போதைய நிலையில் பென் ஸ்டோக்ஸ் அணியில் இடம்பிடித்தால்தான் முடியும் என்ற நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இல்லை. இதனால் அவர் குடும்பத்துடன் கூடுதல் நாட்களை செலவிட முடியும். பின்னர்தான் பென் ஸ்டோக்ஸ் அணியில் இடம் பெறுவது குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி யோசிக்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.