இனி இதிலும் விலை உயர்வா?? இப்படியே போனால் என்னதான் செய்வது!!
கர்நாடக மாநிலத்தில் பால் விலையானது ஒரு லிட்டருக்கு மூன்று ரூபாய் அதிகப்படுத்தி கர்நாடக மாநில அரசு உத்தரவை பிறப்பித்தது. இந்த விலை உயர்வு வருகின்ற ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கிறது.
இந்த பால் விலை உயர்வு மட்டுமல்லாது, காய்கறிகளின் விலையும் தற்போது உச்சத்தை தொட்டு வருகிறது. குறிப்பாக தக்காளியின் விலை பலமடங்கு அதிகரித்து வருகிறது.இதனைத்தொடர்ந்து மளிகைப் பொருட்களின் விலையும் பன்மடங்கு உயரந்துள்ளது.
இதற்கு முன்னராகத்தான் மின் கட்டண உயர்வு மற்றும் கேஸ் சிலிண்டர் உயர்வு முதலியவற்றை அரசு அறிவித்திருந்தது. இந்த காய்கறி, பால் மற்றும் மின் கட்டண உயர்வால் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஓட்டல்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது.
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்ததால் ஓட்டல்களை மூடும் அளவிலான நிலை தற்போது ஏற்பட்டு வருகிறது. இதனால் பெங்களூர் ஓட்டல்களில் பத்து சதவிகிதம் உணவின் விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த உணவு விலை உயர்வு ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வர இருப்பதாக ஓட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஓட்டல் உரிமையாளர்களின் சங்க தலைவர் பிசிராவ் இது குறித்து கூறி இருப்பதாவது,
ஓட்டல்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களான, அரிசி, காய்கறிகள், மின் கட்டணம் முதலிவற்றை அரசு உயர்த்தி உள்ளது. மேலும், ஓட்டலில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு ஊதியம் அதிகமாக வழங்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் அனைவரும் இந்த விலை உயர்வால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, ஓட்டலின் உரிமையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலும், அதே சமயம் உணவுகளின் விலையை அதிகமாக உயர்த்தாமலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளார்.
இவை அனைத்தையும் கருத்தில் கொண்டுதான் உணவு விலையில், இந்த பத்து சதவகிதம் விலை உயர்வை கொண்டு வந்திருக்கிறோம் என்றும் கூறி உள்ளார்.
ஏற்கனவே, விலைவாசி உயர்வால் கலக்கத்தில் இருந்த பொது மக்களுக்கு தற்போது உணவிலும் விலை உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.