ரேஷன் கடைகளில் இந்த பொருளும் இனி விற்கப்படுமா? மக்கள் ஆர்வம்!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா கருப்பட்டி கிராமத்தில் தென்னை விவசாயிகள் சங்கத்தில் அமைப்பு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர் பி.பிச்சை தலைமை ஏற்று நடத்தினார். மதுரை மாவட்ட தென்னை விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பி.நாகேந்திரன் துணைச் செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். இந்தக் கூட்டத்தில் கருப்பட்டி கிளையின் தலைவராக உமா்தீன் செயலாளராக ஆனந்த் பொருளாளராக காதா்மைதீன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும் புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்திய தென்னை விவசாயிகள் சங்கத்தின் நோக்கங்களை விளக்கி அச்சங்கத்தின் மாநில குழு உறுப்பினரான ஏ.விஜயமுருகன் பேசினார். மேலும் இந்த கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட தென்னை விவசாயிகள் கலந்து கொண்டனர் தேங்காய் விலை வளர்ச்சியை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும் குறித்த பத்தி தேங்காய் கூட்டுறவு சங்கம் மூலம் ஒரு கிலோ 50% நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் கொப்பரைத் தேங்காய் கிலோ ரூ.140 ரூபாய்க்கு விற்பனை நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் நிரந்தர கொள்முதல் நிலையையே அமைக்க வேண்டும் எனவும் தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். மேலும் தமிழகத்தில் மாவட்டம்தோறும் அரசு சார்பில் தேங்காய் எண்ணெய் ஆலைகள் அமைக்க வேண்டும் தேங்காய் எண்ணெயை உணவுக்கு பயன்படுத்தும் வண்ணம் ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்க வேண்டும் என இவர் திருமணங்கள் அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.