‘லியோ’ படத்தை தொடர்ந்து மீண்டும் விஜயுடன் கைகோர்க்கும் த்ரிஷா ?

Photo of author

By Hasini

‘லியோ’ படத்தை தொடர்ந்து மீண்டும் விஜயுடன் கைகோர்க்கும் த்ரிஷா ?

Hasini

‘லியோ’ படத்தை தொடர்ந்து மீண்டும் விஜயுடன் கைகோர்க்கும் த்ரிஷா ?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், நடிகை த்ரிஷா உள்ளிட்டோர் நடித்து வெளியான திரைப்படம் ‘லியோ’. இப்படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது ‘கோட்’ (தி க்ரேடஸ்ட் ஆப் ஆல் தி டைம்) என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினை வெங்கட் பிரபு இயக்குகிறார். மேலும், இப்படத்தில் ஜெயராம், பிரபுதேவா, ஸ்னேகா, லைலா, மோகன், பிரசாந்த், யோகிபாபு, கணேஷ், பிரேம்ஜி, அஜ்மல் அமீர், வைபவ், அஜய் ராஜ், மீனாட்சி சவுத்ரி, அரவிந்த் ஆகாஷ் என ஓர் பட்டாளமே தங்களுக்கென கொடுக்கப்பட்ட முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இப்படத்தினை ஏ.ஜி.எஸ்.என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இதன் க்ளைமாக்ஸ் காட்சிகள் கேரளா மாநிலத்தில் எடுக்கவுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் இப்படத்தின் நடிகை த்ரிஷா சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என்னும் செய்தி அண்மையில் கசிந்துள்ளது. விஜய்க்கும் இவருக்குமான காட்சிகள் ரகசியமாக படமாக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், இப்படத்தில் ஒரு பாடலுக்கும் நடிகை த்ரிஷா விஜயுடன் இணைந்து நடனம் ஆடவுள்ளார் என்று கூறப்படுகிறது. எனினும், இது குறித்த அதிகாரபூர்வ தகவல் ஏதும் படக்குழுவினர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை.

நடிகை த்ரிஷா, விஜயுடன் இணைந்து கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி, உள்ளிட்ட திரைப்படங்களில் இணைந்து நடித்தனர். சுமார் 14 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த வெற்றி ஜோடி மீண்டும் ‘லியோ’ படத்தில் இணைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.