பெங்களூர் அணியிலிருந்து விராட் கோலி விலகலா? என்ன சொல்கிறார் கோலி?

0
120
ஐபிஎல் போட்டியில் அவர் அறிமுகமான காலத்தில் இருந்தே இந்திய அணி கேப்டன் விராட் கோலி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார்.  விராட் கோலியின் சிறப்பான ஆட்டத்தால் 2016 ஆம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில் ஆர்சிபி அணியை விட்டு வெளியேறும் எண்ணம் எனக்கு எப்போதும் வந்ததே இல்லை என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து விராட் கோலி  பேசும்போது  மூன்று முறை சாம்பியன் பட்டத்தை மகவும் நெருங்கி வந்துள்ளோம். ஆனால் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாமல் போய்விட்டது.
எந்தவொரு சூழ்நிலையிலும் அணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று நினைத்தது கிடையாது. அதற்கு அணி என் மீது வைத்துள்ள அன்பும், அக்கறையும்தான். ஒரு சீசனில் சிறப்பாக விளையாடினாலும், விளையாடாவிட்டாலும் நீங்கள் அதுகுறித்து உணர்ச்சிவசப் படலாம். ஆனால், விசுவாசம் ஆர்சிபி அணியோடு இருக்கும். ஆர்சிபி மிகவும் விசித்திரமானது.  ஐபிஎல் போட்டியில் விளையாடும் இந்த நேரம் வரை, அணியை விட்டு ஒருபோதும் வெளியேறமாட்டேன் என்று கூறினார்.

Previous articleஎன்ன நடக்கிறது நாம் தமிழர் கட்சியில்? கட்சியில் நிதி மோசடி? தலைமை நிர்வாகி அதிருப்தியால் கட்சி இரண்டாக பிளவு??
Next articleசார்ஜாவில் புதிய முறையினை கையாளும் வனத்துறையினர்