கற்ப்பூரவல்லி + தேங்காய் எண்ணெய் இருந்தால் தலையில் ஒரு வெள்ளை முடி கூட தென்படாது!! 100% அனுபவ உண்மை!
தலையில் நரை முடி இருந்தால் அவை வயதான தோற்றத்தை கொடுக்கும்.இதனால் உடல் அழகு போய்விடும்.எனவே தலையில் உள்ள நரை முடியை நிரந்தரமாக கருமையாக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள கற்பூரவல்லி ஹேர் ஆயிலை தலைக்கு பயன்படுத்தி வாருங்கள்.இதனால் ஆரோக்கியமான முறையில் தலையில் உள்ள நரை முடி அடர் கருமையாக மாறும்.
தேவையான பொருட்கள்:-
1)கற்பூரவல்லி இலை – 2
2)வெந்தயம் – 1 தேக்கரண்டி
3)இலவங்கம் – 10
4)தேங்காய் எண்ணெய் – 1/2 லிட்டர்
செய்முறை:-
இரண்டு கற்பூரவல்லி இலையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.பிறகு 10 இலவங்கத்தை உரலில் போட்டு ஒன்றிரண்டாக இடித்துக் கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் ஒரு இரும்பு வாணலி வைத்து 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் இடித்த இலவங்கம் சேர்த்து கொதிக்க விடவும்.
பிறகு ஒரு தேக்கரண்டி வெந்தயம் போட்டு பொரிய விடவும்.பிறகு நறுக்கிய கற்பூரவல்லி இலைகளை போட்டு 2 நிமிடங்கள் காய்ச்சி அடுப்பை அணைக்கவும்.
இந்த எண்ணையை ஆறவிட்டு ஒரு பாட்டிலுக்கு வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.இந்த எண்ணெயை தலைக்கு அப்ளை செய்து வந்தால் தலை முடி அடர் கருமையாக மாறும்.