மதுவுக்கு அடிமையான பெண்கள்! உணவு விடுதியில் செய்த களேபரம்! அதிரடி காட்டிய போலீஸ்!

Photo of author

By Hasini

மதுவுக்கு அடிமையான பெண்கள்! உணவு விடுதியில் செய்த களேபரம்! அதிரடி காட்டிய போலீஸ்!

Hasini

Women addicted to alcohol! The gallery made at the restaurant! Police in action!

மதுவுக்கு அடிமையான பெண்கள்! உணவு விடுதியில் செய்த களேபரம்! அதிரடி காட்டிய போலீஸ்!

தற்போதெல்லாம் குடிப்பழக்கம் என்பது ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் பொதுவான ஒரு விஷயமாக ஆகி விட்டது. அந்த அளவிற்கு பெண்களும் ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதுபோல் குடிக்கு அடிமையாகி வருகிறார்கள். அவர்களுக்கென தனி கவுண்டர்கள் திறக்கும் அளவிற்கு பெண்களும் மது வாங்கி குடிக்கின்றனர்.

அதுபோல் சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்தவர் சௌமியா. 35 வயதான இவர் அதே பகுதியில் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் கிண்டியில், கத்திபாராவில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு அருகில் இருந்த டேபிளில் ஆன்லைன் டிரேடிங் நடத்திவரும் அயனம் பாக்கத்தைச் சேர்ந்த மீரா என்பவரும் மது அருந்திக் கொண்டிருந்தார்.

அப்போது அவர் கைபேசியில் யாருடனோ மிகவும் சத்தமாக அதாவது மற்றவர்கள் என்ன இது? என்று கேட்கும் அளவிற்கு சத்தமாக பேசி இருக்கிறார். அதற்கு சௌமியா அவரிடம் நாம் நட்சத்திர ஹோட்டலில் இருப்பதால், மெதுவாக பேசுங்கள். இங்கிதமாக நடந்து கொள்ளுங்கள். நிம்மதியாக மது குடித்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

அதன் காரணமாக ஆத்திரமடைந்த மீரா சௌமியாவை தகாத வார்த்தைகளை கொண்டு திட்டி தீர்த்துள்ளார். அதனால் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதங்கள் முற்றி கைகலப்பாக மாறியது. இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

மேலும் இந்த இரண்டு பெண்களையும் நட்சத்திர ஓட்டலின் ஊழியர்கள் எவ்வளவோ சமாதானம் செய்தும் அவர்களை தடுக்க முடியவில்லை. அதன் காரணமாக பரங்கிமலை போலீசாருக்கு ஓட்டல் மேலாளர் தகவல் கொடுத்தார். உடனே நட்சத்திர ஓட்டலுக்கு விரைந்து வந்த போலிசார் அந்த 2 பெண்களையும் கைது செய்து கூட்டிச் சென்றனர்.

பின் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அதில் மீராவை மட்டும் அவர்கள் சிறையில் அடைத்தனர். மேலும் சௌமியா மீது ஏற்கனவே இதே போல் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் குடிபோதையில் தகராறு செய்த வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதால், அவரை அங்கு ஒப்படைத்தனர். காலம் எங்கு போய்க் கொண்டிருக்கிறது. ஒரு இரண்டு பெண்கள் பேசிக் கொண்டால் வீட்டில் சண்டை வரும் அல்லது குழாயடி சண்டையாக இருக்கும். அப்படி எல்லாம் பார்த்து இருப்போம் இது புதிதாக குடி போதையில் சண்டை. இனி வரும் காலங்களில் அதையும் பார்ப்போம் போல.