விரைவில் கர்ப்பம் தரிக்க விரும்பும் பெண்கள் இந்த விஷயங்களை தவிர்ப்பது நல்லது!!
பெண்களுக்கு அடையாளம் தாய்மை.திருமணமான பெண்கள் விரைவில் தாய்மை அடைய வேண்டும் என்று ஆசைக் கொள்வது வழக்கம்.ஆனால் இன்றைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் கருவுறுதலில் பல சிக்கல்கள் ஏற்படுகிறது.
உடல் பருமன்,சினைப்பை நீர்க்கட்டி,தைராய்டு போன்ற பிரச்சனைகளை சந்தித்து வரும் பெண்களுக்கு கருவுறுதலில் தாமதம் ஏற்படும்.உலகில் பிறப்பு சதவீதமானது குறைந்து வருகிறது என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வின் மூலம் தெரிய வருகிறது.
இதற்கு காரணம் ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு,பெண்களுக்கு கருப்பை தொடர்பான பாதிப்புகள் தான் என்று சொல்லப்படுகிறது.அப்படி இருக்கையில் கர்ப்பம் தரிக்க விரும்பும் பெண்கள் சில விஷயங்களை கடைபிடிப்பது நல்லது.
கருப்பையில் கரு தங்குவதற்காக நாம் சில முறைகளை பின்பற்ற வேண்டும்.கர்பத்திற்காக சரியாக உடலுறவு வைத்துக் கொண்ட பெண்கள் அதிக சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை தவிப்பது நல்லது.
உடற்பயிற்சி மேற்கொண்டு வரும் பெண்களாக இருந்தால் அதை முதல் 3 மாதங்களுக்கு குறைத்துக் கொள்வது நல்லது.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் உணவுகளை முற்றிலும் தவிர்க்கவும்.இது போன்ற உணவுகளால் கருவுறுதலில் பாதிப்பு ஏற்படும்.
கர்ப்பத்திற்கு திட்டமிடும் பெண்கள் உடல் மற்றும் மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.அதிகப்படியான மன அழுத்தம் கருவுறுதலுக்கு தடையை ஏற்படுத்தும்.
புகை மற்றும் மது அருந்தும் பெண்களுக்கு கருவுறுதலில் தாமதம் ஏற்படும்.எனவே இந்த பழக்கத்தை விடுவது நல்லது.
டீ,காபி போன்ற பானங்களை அருந்துவதை தவிர்க்கவும்.இந்த பானங்கள் கருச்சிதைவு அபாயத்தை அதிகரிக்கும்.
கர்ப்பத்திற்கு திட்டமிடும் பெண்கள் தினமும் 8 முதல் 9 மணி நேரம் தூங்குவது அவசியம்.உடல் சூட்டை அதிகரிக்க கூடிய உணவுகளை தவிர்ப்பது நல்லது.தேவையான அளவு தண்ணீர் அருந்தி உடலை புத்துணர்வுடன் வைத்துக் கொள்ள வேண்டும்.இது போன்ற விஷயங்களை பின்பற்றுவதன் மூலம் எளிதில் கருத்தரிக்க முடியும்.