வரலாறு படைத்த இந்திய மகளிர் ஹாக்கி அணி!! ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேற்றம!!!

0
143

வரலாறு படைத்த இந்திய மகளிர் ஹாக்கி அணி!! ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேற்றம!!!

40 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மகளிர் ஹாக்கி அணி ஒலிம்பிக் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், இன்று காலை நடைபெற்ற மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

1980ஆம் ஆண்டில் மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் மகளிர் ஹாக்கி அணி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த போட்டியில் மகளிர் பிரிவில் 6 அணிகள் மட்டுமே பங்கேற்ற நிலையில் 4-வது இடத்தை மட்டுமே பிடித்தது. அதன் பிறகு நடைபெற்ற ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியிலும் இந்திய மகளிர் ஹாக்கி அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. தற்போது சுமார் 40 ஆண்டுகளுக்கு பின்பு முதல் முறையாக ஒலிம்பிக் போட்டியில் காலிறுதிக்கு இந்திய மகளிர் அணி தகுதி பெற்றது.

இந்நிலையில் இந்திய ஹாக்கி அணி கால்இறுதியில் பலம்வாய்ந்த ஆஸ்திரேலிய அணியுடன் மோதியது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று முதல்முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

Previous articleடோக்கியோ ஒலிம்பிக்: மகளிர் ஹாக்கி அணி வரலாற்று சாதனை!! பதக்கப் பட்டியலில் பி.வி. சிந்து!!
Next articleரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசம்!! வெளியாகவுள்ள அசத்தல் அறிவிப்பு?!