குடியரசு தின விழாவில் பெண்கள் அணிவகுப்பு மட்டுமே!! மத்திய அரசு அறிவிப்பு!!

Photo of author

By CineDesk

குடியரசு தின விழாவில் பெண்கள் அணிவகுப்பு மட்டுமே!! மத்திய அரசு அறிவிப்பு!!

குடியரசு தின விழாக்களில் நடைபெறும் அணிவகுப்பில் அடுத்த ஆண்டு முதல் பெண்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடியரசு தின விழா அணிவகுப்பில் ஆண்டு தோறும் ராணுவப்படையில் உள்ள பிரிவுகளில் அதிகாரிகள் அந்தஸ்த்தில் உள்ள பெண்கள் மட்டுமே கலந்து கொண்டு வந்தனர்.

ராணுவ படை பிரிவுகளுக்கு தலைமை தாங்கும் அதிகாரிகளாக பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த ஆண்டு நடைபெற்ற விழாவிலும் அதிகாரிகள் அளவில் உள்ள பெண்களே கலந்து கொண்டனர். குடியரசு தின விழா முடிந்த பிறகு பிப்ரவரி 7 ஆம் தேதி நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், ராணுவ படைப்பிரிவுகள், பேண்டு குழுவினர் போன்ற அணிவகுப்பில் பெண்கள் மட்டும் பங்கேற்றால் சிறப்பாக இருக்கும் என முடிவு  செய்யப்பட்டுள்ளது.

தற்போது ராணுவ போலீஸ் பிரிவில் 100 பெண்களும், கடற்படை அக்னி பாதை திட்டத்தில் 273 பெண்களும் அதாவது வீரர்கள் அந்தஸ்த்தில் உள்ள பெண்கள் மாலுமிகளாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அடுத்த ஆண்டு நடைபெறும் குடியரசு தின விழாவில் இப்பெண்களை பங்கேற்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதை பற்றிய சுற்றறிக்கை முப்படைகளுக்கும், அந்தந்த துறை அமைச்சகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. எனவே குடியரசு தின விழா கடமைப் பாதையில் நடக்கும் அணிவகுப்பு, அலங்கார ஊர்திகள், மற்றும் பேண்டு இசை நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் பெண்கள் மட்டுமே பங்கேற்பார்கள்.

இதே போன்று மாநிலங்கள் மற்றும் அரசு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் என அனைத்திலும் பெண்கள்  பங்கேற்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.