மகளிர் உரிமைத் தொகை விவகாரம் : சர்ச்சையில் சிக்க வைத்த தந்தி டிவி
மகளிர் உரிமைத் தொகை தொடர்பான செய்தி ஒன்றை தந்தி தொலைக்காட்சி செய்தியாக ஒளிபரப்பியது. இதில், இல்லத்தரசி ஒருவர் தனக்கு ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை தனது வங்கி கணக்கில் வந்து விட்டதாக மகிழ்ச்சி தெரிவித்தார். தனது வீட்டில் இருந்தபடி செய்தியை தந்தி தொலைக்காட்சிக்கு அப்பெண் பேட்டி அளித்தார்.. சர்ச்சையும் இதில் தான் உள்ளது.
தனக்கு ஆயிரம் ரூபாய் கிடைத்து விட்டதாக கூறும் இல்லத்தரசி வீட்டில் சோபா செட் உள்ளது. பெரிய அளவு எல்.இ.டி டிவி உள்ளது. கழுத்தில் பெரிய அளவு தங்க சங்கிலி, அவர் பெரிய வீட்டில் வசிப்பதாக செய்தியை தொலைக்காட்சியில் காட்டப்படும் வீடியோவில் தெளிவாக தெரிகிறது
கஷ்டப்படும் எத்தனையோ இல்லத்தரசிக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை கிடைக்கவில்லை. கஷ்டப்படும் பெண்களின் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை பெறுவதற்கு உரிய தகுதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அனைத்து வசதிகளும் கூடிய ஒரு குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை மாந்தோறும் ஏன்? தர வேண்டும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அதே சமயத்தில், தந்தி டிவியில், காட்டப்பட்ட இல்லத்தரசியை விட வறுமையில் உள்ள குடும்பத் தலைவருக்கு மகளிர் உதவி தொகை தர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசுக்கு தமிழக பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் உண்மையில் மேலும் தந்து தொலைக்காட்சி ஒளிபரப்பான இந்த செய்தி விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டது அல்லது உண்மையான செய்தி தற்போது எழுந்துள்ளது.