உலகையே உலுக்கி இருக்கும் சக்திவாய்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவம்!

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட்டில் மிகப்பெரிய அளவில் சக்தி வாய்ந்த குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

அந்த நாட்டின் முன்னாள் பிரதமரான ரபீக் ஹரீரி 2005 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட வழக்கின் தீர்ப்பானது இன்னும் சில நாட்களில் வரவிருக்கும் நிலையில் இந்தச் சம்பவம் நிறைவேறியுள்ளது.

 

 

லெபனானின் தலைநகரான பெய்ரூட்டில் நகரத்தின் துறைமுக பகுதியில்தான் முதல் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாக தகவல்கள் கூறப்படுகிறது.

 

மேலும் இரண்டாவது குண்டு வெடிப்பு பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. மேலும் இந்த குண்டுவெடிப்பு தொடர்பான செய்திகளில் குண்டு வெடிப்பினால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் பற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளிவரவில்லை.

 

 

மேலும் ரபீக் ஹரீரி 2005 ஆம் ஆண்டு கார் குண்டு வெடிப்பில் இறந்தது பற்றிய வழக்கினை ஐநா தீர்ப்பாயம் விசாரித்து வந்த நிலையில், இதன் தீர்ப்பு வெளியாகவிருக்கும் சூழலில் இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தேறியுள்ளது.

 

இந்த சம்பவத்தில் ஈரான் நாட்டின் ஹிஸ்புல்லாஹ் அமைப்பைச் சேர்ந்த நான்கு பேர் இதில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளனர். ஆனால் அவர்கள் இந்த குற்றத்தை மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

மேலும் இரண்டாவது கண்டுபிடிப்பானது ஹரீரி வீட்டிற்கு அருகில் நிகழ்ந்திருக்கலாம் எனவும், இந்த தொடர் குண்டுவெடிப்பில் பலர் காயம் அடைந்துள்ளனர் மேலும் இதனால் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது என்றும் அந்த நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment