ஆன்லைனில் அதிகம் பொருட்களை வாங்குபவரா நீங்க?மக்களே உஷார்! கொள்ளை கும்பல் உலா?

0
135

ஊரடங்கு காரணமாக தற்போது ஆன்லைன் ஷாப்பிங் மோகம் முந்தைய கால கட்டங்களை விட தற்போது பலமடங்கு அதிகரித்து உள்ளது.இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் ஒரு கொள்ளைக் கும்பல் உறுதி செய்யப்பட்ட நிறுவனங்களை போன்றே லோகோவை வைத்துக்கொண்டு மக்களிடம் பணத்தை கொள்ளையடித்து வருகின்றது.உங்கள் பணம் பறிபோகாமல் இருக்க ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்போது இந்த சில விஷயங்களை கவனித்து வாங்குங்கள்.

ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் போது எதை எதை தவிர்க்க வேண்டும் எதை செய்யக்கூடாது?

நீங்கள் ஆன்லைனில் ஷாப்பிங் செய்ய விரும்பினால் அந்த ஆன்லைன் சைட் உண்மையானதா நம்பகத்தன்மையான என்பதனை நீங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

எவ்வாறு உறுதி செய்ய வேண்டும்?

முதலில் லோக சரியானதாக, சரியான இடத்தில் பொருத்தப்பட்டுள்ளதா என்பதை சோதித்து பார்க்க வேண்டும்.

பின்னர் ஆர்டர் செய்யும் பொருளின் கீழ் உள்ள அனைத்து ரிவ்யூஸ்-யையும் அந்த பொருளின் அனைத்து details -யையும் முழுமையாக படித்து பார்க்க வேண்டும்.

ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்கள் பெரும்பாலும் Case on டெலிவரி ஆக்சன்-ஐ பயன்படுத்த வேண்டும்.முக்கியமாக விலை உயர்ந்த மின்னணு சாதனங்கள் வாங்கும்பொழுது கேஷ் ஆன் டெலிவரி பயன்படுத்துவது
பாதுகாப்பானதாகும்.

நாம் ஒரு பொருளை ஆன்லைனில் ஆர்டர் செய்யும்பொழுது assured என்ற முத்திரை உள்ளதா என்பதனை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

பொதுவாக உறுதிசெய்யப்பட்ட ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களில் ஆடர் செய்த மின்சாதன பொருட்களை 15 நாட்களுக்குள் மாற்றிக் கொள்ளும் வசதிகொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்கள் மிகக் குறைவாக இருந்தாலோ அல்லது அதிகமாக இருந்தாலோ நீங்கள் சற்று கவனமாக இருத்தல் மிகவும் நல்லது.

எந்த ஒரு ஆன்லைன் ஷாப்பிங் அஃப்களிலும் உங்கள் ஏடிஎம் மற்றும் வங்கி கணக்குகளை பதிவு செய்வதை தவிர்ப்பது மிகவும் நல்லது.

author avatar
Pavithra