COVID-19 நோய்த்தொற்று காரணமாக உலக அளவில் McDonald’s உணவங்களின் விற்பனை வீழ்ச்சி கண்டுள்ளது. எதிர்பார்த்ததைவிட விற்பனையில் வீழ்ச்சி அதிகமாக இருப்பதாகவும் பல நாடுகளில் அறிவிக்கப்பட்ட முடக்க நிலையால் அதிக பாதிப்பு ஏற்பட்டதாகவும் உணவகம் கூறியது. வருவாயில் 30.5 விழுக்காடு குறைந்தது அதாவது 3.76 பில்லியன் டாலர். கடந்த காலாண்டில் உலக அளவில் McDonald’s உணவங்களின் விற்பனையில் சுமார் 24 விழுக்காடு குறைந்தது.
பிரிட்டன், பிரான்ஸ், லத்தீன் அமெரிக்கா ஆகிய வட்டாரங்களில் அதிக நஷ்டம் ஏற்பட்டது. அமெரிக்காவில் மட்டும் விற்பனை 8.7 விழுக்காடு சரிந்தது. தற்போது பல நாடுகளில் முடக்கநிலை தளர்த்தப்பட்டு வருவதால் வியாபாரம் மீண்டும் ஓரளவு சூடு பிடிக்கத் தொடங்கியிருப்பதாய் நிறுவனம் சொன்னது.