பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையால் கவலைப்படுகிறீர்களா?? கட்டாயம் இதை ட்ரை பண்ணுங்க!!

0
150

பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையால் கவலைப்படுகிறீர்களா?? கட்டாயம் இதை ட்ரை பண்ணுங்க!!

குழந்தை பிறந்த பிறகு தொப்பை அதிகமாக இருந்தால் இதை சாப்பிட்டால் போதும்.குழந்தை பிறந்த பிறகு உண்டாகும் ஹார்மோன் மாற்றங்கள் கருப்பையை சுருக்கி கர்ப்பத்துக்கு முந்தைய நிலையில் செல்ல வேண்டும்.

கருப்பை விரிவடைந்ததால் வயிற்றில் இருக்கும் சருமமும் விரிவடைந்திருக்கும். இதனால் வயிறு பகுதி தசை தளர்ந்து இருக்கும்.

உடனடியாக வயிறு பழைய நிலைக்கு திரும்புவதற்கு சாத்தியம் குறைவு தான். ஆனால் சில குறிப்புகளை சரியாக பின்பற்றுவதன் மூலம் தொப்பை சருமத்தை இறுக்க செய்யலாம்.

ஒன்பது மாதங்கள் சுமந்து ஒரு குழந்தையை பெற்றெடுப்பது என்பது ஒரு எளிதான காரியம் அல்ல. அதற்காக பெண்கள் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும்.ஒரு அழகான குழந்தையை பெற்றெடுத்த பிறகு அவர்களுக்கு வரும் மகிழ்ச்சி அளவில்லாதது.

ஆனால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பிரசவத்திற்கு பிறகு அவர்கள் சில கஷ்டங்களை சந்திக்கின்றனர். உடல் ரீதியாக பார்த்தால் பிரசவத்திற்கு பிறகு பெண்களின் வயிற்றுப்புற சதைகள் தொங்க ஆரம்பித்து விடும்.

உடலழகுக்கு என்று அவர்களால் நேரம் செலுத்த முடியாது. என்ன தான் பெல்ட் போட்டுக் கொண்டாலும் இறுக்கமான பெல்ட்டால் வயிறு வலிக்கும்.

அசெளகரியமாகவும் பீல் பண்ணுவீங்க. சரி உடற்பயிற்சி செய்யலாம் என்றால் குழந்தையை பார்க்கவே சரியாக இருக்கும். இந்த வயிற்றுப்புற தொங்கும் சதைகளைக் கண்டு பெண்கள் அதிகம் வருதப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.எனவே இதனை போக்குவதற்கு வீட்டில் செய்யக்கூடிய வைத்தியம்.

தேவையான பொருட்கள்:

சீரகம்

ஓமம்

கருஞ்சீரகம்

ஏலக்காய்

சுக்குப்பொடி

பால் பெருங்காயம்

கருப்பட்டி

செய்முறை:

1: முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 50 கிராம் சீரகம், 50 கிராம் ஓமம், 25 கிராம் கருஞ்சீரகம், 50 கிராம் ஏலக்காய், மற்றும் 50 கிராம் சுக்கு பொடி சேர்த்து மிதமான சூட்டில் நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

2: பின்பு பெருங்காயத்தையும் நெய் விட்டு மிதமான சூட்டில் வறுத்துக் கொள்ளவும்.

3: பின்பு அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து பொடி ஆக்கிக் கொள்ளவும். அதில் 100 கிராம் நாட்டு சக்கரை சேர்த்து கலக்கி கொள்ளவும்.

4: அடுப்பில் பாத்திரத்தை வைத்து ஒரு கப் தண்ணீர் சேர்த்து அதில் அரைத்து வைத்த அந்த பொடியை 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.

5: பின்பு வடிகட்டி அதனை குடித்து வந்தால் போதும்.

இதனை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம் அல்லது இரவு தூங்கும் முன்பு குடிக்கலாம்.

இதை ஒரு 15 நாட்கள் குடித்து வந்தால் அந்த தொப்பை நீங்கிவிடும் மற்றும் மாதவிடாய் பிரச்சனைகள் போன்ற அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்.

நார்மல் பிரசவம் இருப்பவர்கள் இதனை குடித்த வரலாம் அல்லது சிசேரியன் பண்ணி இருந்தாலும் அவர்கள் ஒரு மாதத்திற்கு பிறகு இதனை குடிக்கலாம்.

சீரியல் பிறகு 5 வருடம் 10 வருடம் ஆனாலும் கூட இதனை குறித்து வரலாம் இதில் எந்த ஒரு குறைபாடும் இருக்காது.

இது ஒரு பெண்களுக்கான நல்ல ஒரு முயற்சி ஆகும் கர்ப்பப்பை போன்ற பிரச்சனைகள் தொப்பை அடிவயிறு தொப்பை இது போன்ற பிரச்சினைகள் அனைத்தும் நீங்கிவிடும்.

Previous articleமூலம் நோய் உங்களது கவலைக்கு காரணமா?? 5 நாட்களில் விரட்டும் அற்புத மருந்து!!
Next articleசேற்றுப்புண்ணால் அவதிப்படுகிறீர்களா?? இனி செலவே இல்லாமல் 3 நாளில் விரட்டலாம்!!