பிக்பாஸ் நிகழ்ச்சியின் பிரபல நடிகைக்கு ஏற்பட்ட விபத்து!! மருத்துவனையில் தீவிர சிகிச்சை!! சோகத்தில் ரசிகர்கள்!!

0
171

பிக்பாஸ் நிகழ்ச்சியின் பிரபல நடிகைக்கு ஏற்பட்ட விபத்து!! மருத்துவனையில் தீவிர சிகிச்சை!! சோகத்தில் ரசிகர்கள்!!

யாசிகா ஆனந்த் கோலிவுட்டின் முக்கிய நடிகை ஆவார். மேலும், இவர் ஆனந்த் தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக பிரபலமானார். அத்துடன் துருவங்கள் பதினாறு என்ற திரைப்படம் மூலம் அறியப்பட்டார்.

இந்த படத்திற்கு பின் யாஷிகா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 2என்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சிக்குப் பின், அவருக்கு எந்த ஒரு விதமான பட வாய்ப்பும் கிடைக்கவில்லை. அதற்கு பின் இவருக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது.

அவை, துருவங்கள் பதினாறு,நோட்டா மற்றும் ஜாம்பி போன்ற படங்களில் நடித்து இருந்தார். மேலும், இவருக்கு எந்த விதமான பட வாய்ப்பும் கிடைக்காத நிலையில், இவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

இந்த நிலையி,ல் அவர் தற்போது சூர்யாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து மாமல்லபுரம் அருகே இருந்த சாலை தடுப்பில் மோதி கார் கவிழ்ந்த விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம் அடைந்தார்.

அத்துடன் யாஷிகாவின் தோழி பவணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். மேலும் படுகாயமடைந்த யாஷிகா ஆனந்த் மற்றும் அவரது நண்பர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். இதனால் ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.

Previous articleதிருமண தடை நீக்கும் மகுடேஸ்வரர்!
Next articleஒலிம்பிக்கில் முதல் சுற்றில் வெற்றி பெற்றார் பி.வி.சிந்து!! அடுத்த சுற்றுக்கு தேர்வு!!