திருமண தடை நீக்கும் மகுடேஸ்வரர்!

0
122

ஈரோடு மாவட்டத்தில் அமைந்திருக்கும் புண்ணியத் தலமாக கருதப்படும் கொடுமுடி திருத்தலம் திகழ்ந்து வருகிறது. இந்த ஆலயத்தில் சிவன், பிரம்மா, திருமால், உள்ளிட்ட மும்மூர்த்திகளும் வீற்றிருக்கிறார்கள்0 இவர்கள் மூவரும் ஒரே ஆலயத்தில் வீற்றிருக்கும் சிறப்பு இந்த கோவிலுக்கு இருக்கிறது திருவண்ணாமலையில் மலையே சிவனாக இருப்பதாக சொல்வார்கள். அதே போல இங்கே மலையின் முடியே சிவலிங்கமாக காட்சியளிப்பதால் கொடுமுடி என்று அழைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இங்கே இருக்கின்ற சிவபெருமானை மகுடேஸ்வரர் என்று அழைக்கிறார்கள். இந்தத் தல இறைவன் சுயம்பு மூர்த்தி ஆவார் என்று சொல்லப்படுகிறது மகுடேஸ்வரர் திருக்கல்யாணத்தை காண்பதற்காக படைக்கும் கடவுளான பிரம்ம தேவனும், காக்கும் கடவுள் ஆன விஷ்ணுவும் இந்த திருத்தலத்திற்கு வந்ததாக தல வரலாறு கூறுகிறது.

இந்த தளத்தில் ராகு, கேதுவால் பாதிக்கப்பட்டவர்கள் வழிபாடு செய்தால் இந்த தோஷங்கள் மிக விரைவில் நீங்கும் அதோடு திருமணத்தடை இருப்பவர்கள் இங்கே வந்து வழிபட்டுச் செல்கிறார்கள். குழந்தை பாக்கியம் பெறுவதற்கும் இங்கே வந்து வழிபாடு செய்கிறார்கள், நாக தோஷம் இருப்பவர்கள் வன்னி மரத்தடியில் கல்லால் செய்யப்பட்ட நாகரை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

இந்த தளத்தில் வேப்ப மரமும் அரச மரமும் இணைந்து இருக்கின்றன. மரத்தடியில் விநாயகர் வீற்றிருக்கின்றார் இவருக்கு காவிரி நதியிலிருந்து நீர் எடுத்து வந்து அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமண வரமும், குழந்தை வரமும், கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.

ஈரோட்டில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் கொடுமுடி இருக்கிறது. கோவிலின் அருகிலேயே தொடர்வண்டி நிலையம் இருப்பதால் வெளியூர் மற்றும் வெளி மாநில பக்தர்கள் வந்து செல்ல சுலபமாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.