ஆண் குழந்தைக்கு அப்பாவான பிரபல காமெடி நடிகர் யோகிபாபு

Photo of author

By Parthipan K

ஆண் குழந்தைக்கு அப்பாவான பிரபல காமெடி நடிகர் யோகிபாபு

Parthipan K

ஆண் குழந்தைக்கு அப்பாவான பிரபல காமெடி நடிகர் யோகிபாபு

விஜய் டீவில் லொல்லு சபாவில் ஒரு சின்ன ரோலில் ஆரம்பித்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் அஜித், விஜய், ரஜினி உள்பட அனைத்து பெரிய ஹீரோக்களின் படங்களிலும் காமெடி வேடத்தில் நடித்து வருகிறார்.அதுமட்டும் அல்லாமல் தர்மபிரபு ,கூர்க்கா போன்ற படங்களில் முன்னணி கதாநாயகனாகவும் நடித்தவர்.

இவர் கவுண்டமணி, செந்தில்,வடிவேலு ,விவேக் மற்றும் சந்தானத்திற்கு பிறகு தமிழ் திரையுலகில் காமெடியனாக வலம் வருபவர் முக்கிய நடிகர்.திருமணம் ஆகாத இவர் பிப்ரவரி மாதம் மஞ்சு பார்கவி என்ற பெண்னை திடீரென திருமணம் செய்தார். இந்த திருமணத்திற்கு அனைத்து திரைத்துறையினரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

திருமணம் ஆகி சில மாதங்களில் கருவுற்ற மஞ்சு பார்கவி க்கு ஜனவரி முதல் வாரத்தில் குழந்தை பிறக்கும் என்று தேதி குறித்தார்கள் மருத்துவர்கள்.ஆனால், நேற்றிரவு (டிசம்பர் 27) வலி அதிகமானதால் மஞ்சு பார்கவியை சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்பு அவருக்கு நேற்றிரவு 7.55 மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது.ஆண்குழந்தை பிறந்ததால் மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறாராம்‌ யோகி பாபு.யோகிபாபுக்கு திரைத்துறையினர் மட்டும் அல்லாமல் அவருடைய ரசிகர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்களாம்.