பாசிப்பயிரில் சாலட் செய்யலாமா! முழு விவரங்கள் இதோ!

0
149

பாசிப்பயிரில் சாலட் செய்யலாமா! முழு விவரங்கள் இதோ!

பொதுவாக குழந்தைகள் பருப்பு வகைகளை அதிகம் விரும்ப மாட்டார்கள். பருப்பு வகை பிடிக்காத குழந்தைகளுக்கு ஒவ்வொரு விதமாக தினம் தினம் செய்து கொடுப்பதன் மூலம் அவர்களின் ஊட்டச்சத்து அதிகரிக்கும் இந்த வகையில் பாசிப்பயிறு வைத்து சாலட் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.

அதற்கு தேவையான பொருட்கள் முதலில் 3/4 கப் பாசிப் பருப்பு எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் தேவையான அளவு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் பிறகு கறிவேப்பிலை1 பச்சை மிளகாய் ,1சிட்டிகைபெருங்காயம்,1 தேக்கரண்டி கடுகு, தேவையான அளவு உப்பு,1/2 கப் துருவிய தேங்காய்,தேவையான அளவு கொத்தமல்லி இலை மற்றும் 1/2 எலுமிச்சை சாறு இந்த பொருட்கள் அனைத்தையும் தேவையான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு

பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து, அதனை வடிகட்டி தனியாக எடுத்து வைக்க வேண்டும்.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்க்க வேண்டும்.பிறகு எண்ணெய் சூடானதும், கடுகு, பெருங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.பின்பு பாசிப்பருப்பில் உள்ள நீரை முழுவதுமாக வடிகட்டி விட்டு அதில் சேர்க்க வேண்டும். மேலும் அதில் கொத்தமல்லி இலை, அரைத்த தேங்காய், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும்.அனைத்து பொருட்களையும் நன்கு கலந்து மாலை நேர சிற்றுண்டியாக குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். இந்த உணவானது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததாகவும் ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் இருக்கும் .

Previous articleதசை பிடிப்பிற்கு முக்கிய காரணம் தண்ணீர் தானா? முழு விவரங்கள் இதோ!
Next articleதினேஷ் கார்த்திக்கின் வான வேடிக்கை… பவுலர்கள் அபாரம்… முதல் டி 20-ல் இந்தியா வெற்றி!