நுழைவு தேர்வை எழுதாமல் நேரடியாக சேரலாம்

Photo of author

By Parthipan K

இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்படும் பயிற்சியாளருக்கான டிப்ளமோ படிப்பில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் இந்த ஆண்டு முதல் நுழைவு தேர்வை எழுதாமல் நேரடியாக சேரலாம் என்று விதிமுறையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து பயிற்சியாளர் டிப்ளமோ படிப்பில் சேர்ந்து படிக்க காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் மனோஜ்குமார், ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற துடுப்பு படகு வீரர் பஜ்ரங்லால் தாக்கர், ஆக்கி வீராங்கனை பூனம் ராணி உள்பட 33 வீரர், வீராங்கனைகள் விண்ணப்பித்துள்ளனர்.