இனி பின்னே தேவையில்லை ஈசியாக பணப்பரிமாற்றம் செய்யலாம்!! UPI-ன் புதிய அப்டேட்!!

Photo of author

By CineDesk

இனி பின்னே தேவையில்லை ஈசியாக பணப்பரிமாற்றம் செய்யலாம்!! UPI-ன் புதிய அப்டேட்!!

நாடு முழுவதும் தற்போது எங்கு பார்த்தாலும் பணப் பரிமாற்றத்திற்காக யுபிஐ முறையை பயன்படுத்தி வருகின்றனர். பெரிய பெரிய நிறுவனங்கள் முதற்கொண்டு சாதாரண கடைகள் வரை அனைத்திலும் இந்த யுபிஐ முறை வந்துவிட்டது.

நாள்தோறும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு புதிய அம்சங்கள் வந்து கொண்டே இருக்கின்றனர். அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு யுபிஐ கட்டணத்தை எளிமையாக்க யுபிஐ லைட் அறிமுகம் செய்யப்பட்டது.

இதன் மூலமாக ஐபோன் பயன்படுத்துபவர்கள் யுபிஐ பின் போடாமலேயே பாதுகாப்பான முறையில் பண பரிமாற்றம் செய்ய முடியும். இதனால் யுபிஐ வாலட்டில் அதிகபட்ச தொகையாக 2 ஆயிரம் ரூபாய் வரை பணத்தை சேமித்து வைத்துக் கொள்ளளாம்.

அதே நரத்தில் பண பரிவர்த்தனையின் போது அதிகபட்ச தொகையாக இருநூறு ரூபாயை பயன்படுத்தும் படி இந்த அப்டேட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த புதிய அம்சங்கள் கொண்ட யுபிஐ மூலமாக ஒரு நாளைக்கு இருபது பரிவர்த்தனைகள் வரை செய்து கொள்ளலாம். இந்த புதிய முறையின் மூலம் பரிவர்த்தனை செய்ய ஐபோன் பயனாளர்கள் முதலில் பேடிஎம் சிலியை ஓப்பன் செய்து அதன் முதல் பக்கத்தில் யுபிஐ லைட் என்னும் பக்கத்தை கிளிக் செய்ய வேண்டும்.

பிறகு உங்களுடைய வங்கி முகவரிகள் அனைத்தும் சரியா என்பதை உறுதி செய்ய வேண்டும். பின்னர் யுபிஐ லைட் வாலட்டில் 2 ஆயிரம் ரூபாய் வரை பணத்தை சேர்த்து பிறகு யுபிஐ விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.

இறுதியாக QR கோர்டை ஸ்கேன் செய்து பணப் பரிவர்த்தனையை செய்து கொள்ளளலாம்.