நடக்க முடியாமல் கூட போகலாம்.. 30 வயது ஆனவர்கள் கட்டாயம் இந்த 7  பாலோ பண்ணுங்க!!

0
79
#image_title

நடக்க முடியாமல் கூட போகலாம்.. 30 வயது ஆனவர்கள் கட்டாயம் இந்த 7  பாலோ பண்ணுங்க!!

ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் தங்களது முப்பது வயதை கடந்து விட்டாலே முதலில் உணவு பழக்க வழக்கத்தில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். குறிப்பாக 30 வயதை தாண்டும் பொழுது தான் கால்சியம் அளவானது உடலில் குறைந்து கொண்டே போகும். அதனை தக்கவைத்துக் கொள்ள உணவு முறைகளை மாற்றம் செய்தால் மட்டுமே எதிர்காலத்தில் உடல் ரீதியாக வரும் பின் விளைவுகளை தவிர்க்க முடியும். அந்த வகையில் 30 வயதை தாண்டியவர்கள் இந்த 7 வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

முதலாவதாக எலும்புகளுக்கு அதிக அளவு தாதுக்கள் தேவை அவ்வாறான தாதுக்கள் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக நமது உடலில் தாதுக்கள் குறைந்தால் அடுத்தடுத்து மூட்டு தேய்மானம் கால்சியம் குறைவு போன்ற பிரச்சனைகள் உண்டாகும். எனவே முப்பது வயதை கடந்து விட்டாலே நாம் உணவில் மாற்றத்தை கொண்டு வந்து விட வேண்டும்.

மூன்றாவதாக அதிக உப்பு மற்றும் சர்க்கரை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் உப்பு மற்றும் சர்க்கரை ஆனது அதிக அளவு கால்சியம் குறைபாட்டை ஏற்படுத்தும். எனவே அதனை தினசரி உணவில் மிகவும் குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

நான்காவதாக அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்தாலும் கால்சியம் ஆனது குறையக்கூடும். அதனால் தினந்தோறும் உடற்பயிற்சி செய்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஐந்தாவதாக புரதம் அதிகம் உள்ள மீன், கோழி, முட்டை, பால் போன்றவற்றை சம அளவில் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். சராசரியை தாண்டி அதிகமாக எடுத்துக் கொண்டால் புரதத்தின் சில காரணிகள் சிறுநீர் வழியாக கால்சியத்தை வெளியேற்ற வழிவகை செய்துவிடும்.

ஆறவதாக மார்க்கெட்டில் உள்ள குளிர்பானங்கள் அதிகமாக எடுத்துக் கொண்டால் விரைவிலேயே எழும்பானது அறிக்கப்பட்டு கால்சியம் அளவானது குறைய ஆரம்பித்து விடும்.

ஏழாவதாக புகை புகையிலை மற்றும் மது பழக்கம் ஆகியவை எழும்பின் தன்மையை மாற்றக் கூடியது. இந்த புகையிலையில் உள்ள நிக்கோட்டின் என்ற பொருளானது கால்சியத்தை குறைப்பதோடு எதிர்மறையாகவும் செயல்படும்.